Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓவர் த்ரோ, நோபால், 44 ஆண்டுகள்...!! 2019ம் ஆண்டு உலக கோப்பை பைனலின் மறக்க முடியாத சுவாரசியங்கள்

Recommended Video

WORLD CUP 2019 FINALS : Overthrow | விதி எண் 19.8ஐ மீறி விட்டார்கள்! அதிர வைக்கும் பின்னணி!- வீடியோ

லண்டன்: கிட்டத்தட்ட 2 மாதங்கள் வரை நீடித்த உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா முடிந்து விட்டது. கோப்பையை போட்டியை நடத்திய இங்கிலாந்து தட்டிச் சென்றிருக்கிறது.

உலக கிரிக்கெட் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு இடையில், உலக கோப்பை முடிந்திருக்கிறது. 44 ஆண்டு கால போராட்டத்துக்கு பின் இங்கிலாந்து முதல் முறையாக சாம்பியனாகி இருக்கிறது. அந்த அணிக்கு உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கட்டி போட்ட உலக கோப்பையில் பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில சோகமாகவும், சில விஷயங்கள் குதூகலமாகவும், ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும். அத்தகைய விமர்சனங்ளுடன் இருக்கும் சில சம்பவங்களை இந்த தொகுப்பில் காணலாம்.

தொடர்ச்சியாக 2 முறை

தொடர்ச்சியாக 2 முறை

உலக கோப்பை தொடர் 1975ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அப்போது ஒரு இன்னிங்சுக்கு 60 ஓவர்கள் என்ற முறை அமலில் இருந்தது. 1975, 1979 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 முறை வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியனானது.

இங்கிலாந்து சாதனை

இங்கிலாந்து சாதனை

1975ம் ஆண்டு முதல், உலக கோப்பை தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது இங்கிலாந்து. கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு இங்கிலாந்து. அதன் சொந்த மண்ணில் முதன்முறையாக கோப்பையை இப்போது தான் கைப்பற்றி இருக்கிறது.

உலக கோப்பை சாம்பியன்

உலக கோப்பை சாம்பியன்

உலக கோப்பையில் தொடர்ந்து 3வது முறையாக போட்டியை நடத்திய நாடே கோப்பையை வென்றுள்ளது. 2011ல் இந்தியா, 2015ல் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை தட்டிச் சென்றது. அதன் பிறகு, போட்டியை நடத்திய நாடான இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நியூசி லாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

ரசிகர்கள் வர்ணனை

ரசிகர்கள் வர்ணனை

ஓவர் த்ரோவில் பென் ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பந்து பவுண்டரிக்கு சென்ற நிகழ்வை பேட் ஆப் காட் என்று ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். உலக கோப்பை கால்பந்தில், அர்ஜென்டினாவின் மரடோனா அடித்த கோல் ஒன்று இது போன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை ஹேண்ட் ஆப் காட் என்று மரடோனா விளக்கமளித்திருந்தார்.

நியூசி.க்கு பெருமை

நியூசி.க்கு பெருமை

உலக கோப்பை இறுதியில் தொடர்ச்சியாக 3 மெய்டன் ஓவர்களை வீசிய அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றது. இங்கிலாந்து பேட் செய்த 10 முதல் 12 ஓவர்கள் வரை நியூசிலாந்து ஒரு ரன்னை கூட விட்டுக்கொடுக்க வில்லை. இந்த ஓவர்களை வீசியது ஹென்றியும், கிராண்ட்ஹோமும்.

84 ரன்கள், முதலிடம்

84 ரன்கள், முதலிடம்

உலக கோப்பை இறுதியில் சேசிங்கில் அதிக ரன்கள் எடுத்த ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். நியூசி லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இவர் 84 ரன்கள் எடுத்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

4ம் இடம்

4ம் இடம்

ஒட்டுமொத்தமாக பார்த்தோமானால் சேசிங்கில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் இவர் 4ம் இடத்தில் உள்ளார். முதல் 3 இடங்களை அரவிந்த டி சில்வா, கம்பீர் மற்றும் தோனி ஆகியோர் பிடித்துள்ளனர்.

தோல்வி, விருது

தோல்வி, விருது

நடந்து முடிந்த உலக கோப்பையில் தொடர்நாயகன் விருது நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு வழங்கப்பட்டது. 578 ரன்கள் அடித்ததுடன், அணியை சிறப்பாக வழி நடத்தியதற்காக இந்த விருது அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் சச்சினுக்குப் பிறகு உலக கோப்பை இறுதியில் தோற்ற அணியின் வீரர் தொடர் நாயகன் விருது வென்றிருக்கிறார் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

சேசிங்கில் சாதனை

சேசிங்கில் சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு பிறகு, லார்ட்ஸ் மைதானத்தில் சேசிங் செய்து உலக கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை மொத்தம் 5 உலக கோப்பை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

4 லீக் ஆட்டங்கள்

4 லீக் ஆட்டங்கள்

அதில் 3ல் முதலில் பேட் செய்த அணிகளே வென்றுள்ளன. அதேபோல் 2019 தொடரில் நடந்த 4 லீக் ஆட்டங்களிலும் முதலில் ஆடியே அணிகளே வாகை சூடின. இதனால் முதலில் பேட் செய்யும் அணிக்கு சாதகமான மைதானம் என்ற எழுதப் படாத விதியை இங்கிலாந்து மாற்றி இருக்கிறது.

அயர்லாந்து பூர்வீகம்

அயர்லாந்து பூர்வீகம்

சொந்த நாட்டை விட்டு, மற்ற நாட்டுக்கு உலக கோப்பையை வென்று தந்த கேப்டன் என்ற வித்தியாசமான சாதனைக்கு இங்கிலாந்தின் இயன் மோர்கன் சொந்தக்காரர் ஆகியுள்ளார். ஏன் என்றால் அவரது பூர்வீகம் அயர்லாந்து.

பிளங்கெட் சாதனை

பிளங்கெட் சாதனை

உலக கோப்பை இறுதிப்போட்டியில் அதிக வயதில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனை இங்கிலாந்தின் பிளங்கெட் படைத்துள்ளார். நியூசிலாந்து வீரர் ஜேம்ஸ் நீஷமின் விக்கெட்டை வீழ்த்திய போது அவரது வயது 34 வருடம், 99 நாட்கள். முன்னதாக, இங்கிலாந்தின் டெர்ரிக் பிரிங்கிள் அவரது வயது 33 வருடம் 189 நாட்களாக இருந்த போது இறுதியில் 3 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

ஒரேயொரு நோபால்

ஒரேயொரு நோபால்

எல்லா சாதனைகளைவிட சுவாரசியமான நிகழ்வு ஒன்றும் இருக்கிறது. அதாவது, இந்த உலக கோப்பையில் இங்கிலாந்து மொத்தமாகவே ஒரே ஒரு நோ பால் மட்டுமே வீசி இருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கிறிஸ் வோக்ஸ் வீசிய அந்த நோ பால் தான், இந்த உலககோப்பையில், அந்த அணி வீசிய முதல் மற்றும் கடைசி நோ பால் ஆகும்.

Story first published: Tuesday, July 16, 2019, 12:53 [IST]
Other articles published on Jul 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+