Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் வீரர்களின் டாப் 3 சம்பவங்கள்.. ஒருநாள் போட்டியில் ஜொலித்த வீரர்கள்

மும்பை : 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற்றதால் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் போட்டிகளில் அதிகமாக கவனம் செலுத்தவில்லை. அப்படி விளையாடிய தொடர்களிலும் சீனியர் வீரர்கள் நிறைய பேர் ஓய்வு எடுத்துக் கொண்டனர்.

இதனால் இளம் வீரர்கள் ஒரு நாள் தொடரில் கலக்கினர்.
அதனை மீறி இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் முக்கியமான ஒரு நாள் தொடரில் விளையாடியது.

இந்த செய்தி தொகுப்பில் நடப்பாண்டில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம் .ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணி வீரர்களில் ஸ்ரேயாஸ் ஐயர் 15 இன்னிங்ஸில் விளையாடி 724 ரன்கள் குவித்துள்ளார்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

இதேபோன்று தற்போது ஒரு நாள் அணியிலிருந்து நீக்கப்பட்ட ஷிகர் தவான் 2022ஆம் ஆண்டில் 22 இன்னிங்ஸில் விளையாடி 688 ரன்கள் அடித்திருக்கிறார். இதேபோன்று மூன்றாவது இடத்தில் இளம் வீரர் சுப்மான் கில் 12 இன்னிங்சில் விளையாடி 638 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் இந்திய அணி வீரர்கள் ஒரு நாள் போட்டியில் ஆடிய சிறந்த மூன்று இன்னிங்ஸ் குறித்து தற்போது பார்க்கலாம்.

அக்சர் பட்டேல்

அக்சர் பட்டேல்

மேற்கிந்திய தீவுகளுக்கு அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அக்சர் பட்டேல் 35 பந்துகளில் 64 ரன்கள் விளாசி அசத்தினார். டாஸ் வென்று முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தனர். ஏழாவது இடத்தில் பேட்டிங் வரிசையில் களமிறங்கிய அக்சர் பட்டேல் 11 ஓவரில் 107 ரன்கள் அடிக்க வேண்டும் என இக்கட்டான நிலையில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அக்சர் பட்டேல் 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

இதேபோன்று வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசி அசத்தினார். மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதனை அடுத்து கடைசி ஒரு நாள் போட்டியில் 17 ரன்களுக்கு ஒரு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. அதன் பிறகு தனது அதிரடியை காட்டிய இஷான் கிஷன் 126 பந்துகளில் தனது இரட்டை சதத்தை விளாசினார் .இதன் மூலம் இந்திய அணி 409 ரன்களை குவித்தது. இஷான் கிஷனின் அபார ஆட்டத்தால் இந்திய அணி அன்றைய போட்டியில் வெற்றி பெற்றது.

 ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இதேபோன்று முதல் இடத்தில் இருப்பவர் ரிஷப் பண்ட். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடினமான சூழ்நிலையில் ரிஷப் பண்ட் 131 பந்துகளில் 125 ரன்கள் குவித்தார்.260 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு இந்திய அணி 72 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த ஹர்திக் பாண்டியா ரிஷப் பண்ட் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டு வெற்றி பெற வைத்தது. அந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 16 பவுண்டரிகளை அடித்து நொறுக்கினார். இங்கிலாந்து மண்ணில் அடிக்கப்பட்ட சிறந்த சதங்களில் ஒன்றாக அது இருந்தது.

Story first published: Saturday, December 31, 2022, 13:08 [IST]
Other articles published on Dec 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+