Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022 ஆம் ஆண்டின் டாப் 4 கிரிக்கெட் சர்ச்சைகள்.. பாலியல் பலாத்காரம் முதல் இங்கிலாந்தை அலறவிட்டது வரை

மும்பை : 2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை சர்ச்சையுடன் தான் தொடங்கியது. டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக விராட் கோலி அறிவித்தார்.

இதனால் இந்திய ரசிகர்கள் கங்குலியை போட்டு தாக்கி எடுத்தனர். நடப்பாண்டில் ஐபிஎல் போட்டிகள் போது டெல்லி ராஜஸ்தான் அணிகள் மோதின.

ஐபிஎல் சர்ச்சை

ஐபிஎல் சர்ச்சை

இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் வீரர் மெக்காய் ஒரு ஃபுல் டாஸ் பந்தை வீசினார். இதற்கு நடுவர்கள் நோபால் தரவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த ரிஷப் பண்ட் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன் டெல்லி அணியின் துணை பயிற்சியாளரை களத்திற்கு அனுப்பி நடுவரிடம் முறையிட சொன்னார். இது கிரிக்கெட் விதிகளுக்கு எதிரானது என்று கூறி ரிஷப் பண்ட் , சர்த்துல் தாக்கூர் ,பிரவீன் அம்ரே ஆகியோரின் ஊதியத்தை பிசிசிஐ அபராதமாக விதித்தது.

குணதிலகா கைது

குணதிலகா கைது

இந்த ஆண்டில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணத்திலக்காவின் கைது தான். ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை விளையாட சென்ற அவர் அங்குள்ள பெண் ஒருவரின் வாழ்க்கையில் விளையாடிவிட்டார். பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் போது அவர் கழுத்தை நெரித்து துன்புறுத்தியதாக அந்த பெண் புகார் அளித்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய போலீசார் குணதிலகாவை அவரது மாமியார் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதனை அடுத்து பல்வேறு முயற்சிக்குப் பிறகு குணத்திலக்காவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்கு வாழ்நாள் தடையை விதித்தது.

நேபாள் கேப்டன் நீக்கம்

நேபாள் கேப்டன் நீக்கம்

இதேபோன்று நேபாள் கிரிக்கெட் வீரர் சந்திப் லாமச்சேன் 17 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண் அளித்த புகாரின் பேரில் சந்திப் லாமச்சேனை தேடப்படும் குற்றவாளியாக நேபாள் போலீசார் அறிவித்தனர். சந்திப் வெளிநாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்ததால் அவரை பிடிக்க சர்வதேச போலீசாரின் உதவியும் நாடப்பட்டது. இதனை அடுத்து சந்திப் நேபாள் கிரிக்கெட் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

தீப்தி சர்மாவின் மான்கட்

தீப்தி சர்மாவின் மான்கட்

இந்த ஆண்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்து மகளிர் அணி மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி தான். இதில் இங்கிலாந்தின் கடைசி விக்கெட்டை எடுக்க மான்கட் முறையை தீப்தி சர்மா பயன்படுத்தினார். இதில் சட்ட ரீதியில் எந்த தவறும் இல்லை என்றாலும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இதனை ஒரு பெரும் குற்றமாக கருதி இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவை கடுமையாக விமர்சித்தனர். இதற்கு இந்திய தரப்பிலும் எதிர்ப்பு தெரிவிக்க வார்த்தை மோதல் வெடித்தது. இதனை அடுத்து ஐசிசி தீப்தி சர்மா செய்தது தவறு இல்லை என்று கூறி,விதியிலும் அதன் பிறகு மாற்றத்தை கொண்டு வந்தது.

Story first published: Saturday, December 31, 2022, 17:47 [IST]
Other articles published on Dec 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+