Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எதிர்காலம் இவங்க கையில் தான் இருக்கு.. உலகை கலக்கப் போகும் அந்த நான்கு இளம் பந்துவீச்சாளர்கள்!

லண்டன் : சமீபத்தில் நடந்து முடிந்த 2019 உலகக்கோப்பை தொடரில் வேகப் பந்துவீச்சாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்தினர்.

சில வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என உலகக்கோப்பைக்கு முன்பே கணிக்கப்பட்டு, அதே போல சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். சில வேகப் பந்துவீச்சாளர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பாக உலகக்கோப்பை தொடரை பயன்படுத்திக் கொண்டனர்.

இதில் நான்கு இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் தான் அடுத்த சில ஆண்டுகளுக்கு கிரிக்கெட் உலகை கலக்குவார்கள் என கருதப்படுகிறது.

அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள்

அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள்

உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியது ஆஸ்திரேலியவின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நியூசிலாந்தின் லாக்கி பெர்குசன். இவர்கள் இருவரும் 30 மற்றும் 29 வயதை ஒட்டி இருப்பவர்கள். இவர்களை அடுத்து சிறப்பாக பந்துவீசும் இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் பட்டியல் இதோ -

ஜோப்ரா ஆர்ச்சர்

ஜோப்ரா ஆர்ச்சர்

இங்கிலாந்து அணியில் உலகக்கோப்பை தொடருக்கு சில நாட்கள் முன் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆனவர் ஜோப்ரா ஆர்ச்சர். உலகக்கோப்பை தொடரில் 11 போட்டிகளில் 20 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். இவரது அச்சுறுத்தும் பந்துவீச்சை கண்டு பேட்ஸ்மேன்கள் மிரண்டனர். அடுத்து வரும் நாட்களிலும் அது தொடரும்.

ரஹ்மான்

ரஹ்மான்

வங்கதேச அணி உலகக்கோப்பை தொடரில் மிகவும் சிறப்பாக ஆடியது. அரையிறுதிக்கு முன்னேறாமல் போனாலும், அந்த அணியின் போராட்டம் பலராலும் பாராட்டப்பட்டது. இளம் வீரர்கள் சிலரும் அபாரமாக செயல்பட்டனர். அதில் ஒருவர் தான் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான். கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் சர்வதேச போட்டிகளில் விளையாடி வந்தாலும், உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் 20 விக்கெட்கள் வீழ்த்தி ஒரு புது உச்சத்தை தொட்டுள்ளார். அடுத்த சில ஆண்டுகளுக்கு இவர் இதே பார்மில் நீடிக்க வாய்ப்புள்ளது.

ஷஹீன் ஷா அப்ரிடி

ஷஹீன் ஷா அப்ரிடி

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் ஆமிர் மீது அனைவரின் கண்களும் இருந்த நிலையில், ஐந்து போட்டிகளில் மட்டுமே ஆடிய ஷஹீன் ஷா அப்ரிடி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். 5 போட்டிகளில் 16 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டினார். இவர் தான் பாகிஸ்தான் அணியின் எதிர்காலம் என்பதில் சந்தேகமே இல்லை.

நம்ம பும்ரா

நம்ம பும்ரா

உலகக்கோப்பை தொடரில் வழக்கம் போல தன் சிறப்பான, கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் பும்ரா. நம்பர் 1 ஒருநாள் போட்டிகள் பந்துவீச்சாளராக இருந்தாலும், இவர் இன்னும் இளம் வீரர் தான். 25 வயதே ஆகும் பும்ரா, சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கி மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்போது இருக்கும் வலுவான போட்டி என்றால் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் தான்.

Story first published: Sunday, July 21, 2019, 11:43 [IST]
Other articles published on Jul 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+