டோணியின் கெட்ட கனவு இஷாந்த் சர்மா தான்
டெல்லி: மொஹாலியில் நடந்த மூன்றாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு தாராளமாக ரன் கொடுத்த பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பற்றி ஆளாளுக்கு ஜோக்குகள் அடித்து வருகின்றனர்.
மொஹாலியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்த மூன்றாவது சர்வதேச ஒரு நாள் போட்டியில் இஷாந்த் சர்மா தாராளமாக ரன்களை வாரி வழங்கினார். இதனால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இதையடுத்து இஷாந்த் சர்மாவை ஆளாளுக்கு விளாசி வருகிறார்கள். இந்நிலையில் அவர் பற்றிய ஜோக்குகள் பரவி வருகின்றன. அவற்றை பார்ப்போம்.

ஆஸ்திரேலியாவுக்கு
ஆஸ்திரேலியாவுக்கு பிடித்த எதிர் அணி வீரர் இஷாந்த் சர்மா தான்.

டோணியின் கெட்ட கனவு
இஷாந்த் சர்மா பேட்ஸ்மேன்களின் கனவு, டோணியின் கெட்ட கனவு.

ஓய்வு
சச்சின் அல்ல இஷாந்த் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.

சித்து
இஷாந்தின் பந்துவீச்சை பார்த்து தொண தொண என்று பேசும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூட வாயடைத்துப் போய்விட்டார்.

டோணி
இஷாந்த் சர்மாவின் சூப்பர் ஃபார்மை பார்த்துவிட்டு பேட்ஸ்மேனான டோணி பந்துவீச்சாளராகிவிட்டார்.


Click it and Unblock the Notifications