Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

19 ரன்களில் 6 விக்கெட் இழந்த ஆஸி..முகமது ஷமி அனல் பறக்கும் பந்துவீச்சு..189 ரன்களை துரத்தும் இந்தியா

மும்பை : இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 190 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை வான்கடே மைதானம் ரன்குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால் பெரிய ஸ்கோரை நிர்ணயிக்கும் பொறுப்புடன் ஸ்மித் படை களமிறங்கியது.

காரணம், பனிப் பெழிவு இருப்பதால் இரண்டாவது பந்து வீசுவது மிகவும் சிரமம். இதனால் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய அழுத்தம் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டது. அதிரடி வீரர் வார்னர் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை.

 சிராஜ் அபாரம்

சிராஜ் அபாரம்

இதனையடுத்து தொடக்க வீரராக மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் கூட்டணி களமிறங்கியது. டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இதனால் ஸ்மித் பொறுமையாக விளையாட, இந்த ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்தது.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

கேப்டன் ஸ்மித் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேஎல் ராகுலின் அபாரமான டைவ்விங் கேட்சால் ஆட்டமிழந்தார். எனினும் மறு முனையில் மார்ஷ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். மிட்செல் மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து, அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லாபஸ்சேன் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

ஹர்திக் மாஸ்டர் ஸ்டோர்க்

ஹர்திக் மாஸ்டர் ஸ்டோர்க்

இதனையடுத்து அதிரடி விக்கெட் கீப்பர் ஜோஸ் இங்கிலிஷ், பொறுப்பாக விளையாடி 27 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். விக்கெட்டுகள் சரிந்தாலும், குல்தீப் யாதவ் ஓவரை ஆஸ்திரேலிய வீரர்கள் அடித்து ரன்கள் குவித்தனர். இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா வேகப்பந்துவீச்சாளர்களை மீண்டும் பந்து வீச அழைத்தார். இதற்கு நல்ல பயன் கிடைத்தது.

 சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

கேமிரான் கிரீன் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாட முற்பட்ட மேக்ஸ்வெல் ஜடேஜா பந்தில் 8 ரன்களில் நடையை கட்டினார். ஸ்டோனிஸ் 5 ரன்களிலும், அப்பார்ட் டக் அவுட்டாகியும் பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலிய அணி 188 ரன்களில் சுருண்டது. 19 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்தது. வான்கடே மைதானத்தில் கடந்த 20 ஆண்டுகளில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். ஷமி, சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

Story first published: Friday, March 17, 2023, 17:01 [IST]
Other articles published on Mar 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+