Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2022ல் இந்தியாவுக்காக அதிக ரன்களை அடித்தவர்கள் யார்??.. சீனியர்களை தூக்கி சாப்பிட்ட இளம் வீரர்கள் !

சென்னை: 2022ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத வீரர்கள் தான் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட்டில் 2022ம் ஆண்டு பல்வேறு மாற்றங்களையும், ஏமாற்றங்களையும், புதிய தொடக்கத்தையும் கொடுத்துவிட்டு செல்கிறது என்று தான் கூற வேண்டும். இதனால் ரசிகர்கள் இந்தாண்டை மறந்துவிட வேண்டும் எனும் அளவிற்கு உள்ளனர்.

கேப்டன்சி மாற்றம், ராகுல் டிராவிட்டின் கீழ் பயிற்சி, ரகானே, புஜாரா உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் நீக்கம் போன்ற பல்வேறு மாற்றங்கள் அணிக்குள் கொண்டு வரப்பட்டன.

2022ல் இந்திய அணி

2022ல் இந்திய அணி

இதன் மூலம் அசுர பலமாக உள்ளது என்று நினைக்கப்பட்ட இந்தியா, ஆசிய கோப்பை தொடரில் மோசமாக சொதப்பியது. இதன்பின்னர் டி20 உலகக்கோப்பையிலும் அரையிறுதியில் தோல்வியை தழுவியது. இது ஒருபுறம் இருக்க, சீனியர் வீரர்களுக்கு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுகள், ஹர்திக் பாண்ட்யாவிடம் டி20 கேப்டன்சி ஒப்படைப்பு ஆகியவை தொடக்கமாக பார்க்கப்பட்டுள்ளது.

அதிக ரன்கள் அடித்தவர்

அதிக ரன்கள் அடித்தவர்

இந்நிலையில் இந்த சோக கட்டங்களை தாண்டி இந்திய அணிக்காக ரன் வேட்டை நடத்தியுள்ளனர் சில வீரர்கள். அவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம். 2022ம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து இந்தியாவுக்காக அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதலிடத்தில் உள்ளார். அவர் 40 இன்னிங்ஸ்களில் ஆடி 1,609 ரன்களை குவித்துள்ளார். இதில் 14 அரைசதங்களும் 1 சதமும் அடங்கும்.

அசத்திய இளம் வீரர்கள்

அசத்திய இளம் வீரர்கள்

இந்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளவர் சூர்யகுமார் யாதவ். 43 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 10 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களுடன் 1,424 ரன்களை குவித்துள்ளார். 3வது இடத்தில் ரிஷப் பண்ட் 43 இன்னிங்ஸ்களில் விளையாடி 7 அரைசதங்கள் மற்றும் 3 சதங்களுடன் 1,380 ரன்களை அடித்துள்ளார்.

கோலிக்கு எந்த இடம்

கோலிக்கு எந்த இடம்

இப்பட்டியலில் லேட்டாக வந்தாலும் டேட்டஸ்டாக வருவேன் என்பது போல விராட் கோலி 4வது இடத்தில் இருக்கிறார். 42 இன்னிங்களில் விளையாடி அவர் 11 அரைசதங்கள் மற்றும் 2 சதங்களுடன் சேர்த்து மொத்தம் 1,348 ரன்களை விளாசியிருக்கிறார். 5வது இடத்தில் கேப்டன் ரோகித் சர்மா 995 ரன்களுடன் இடம் பெற்றுள்ளார். இவர் 40 இன்னிங்களில் இதனை செய்துள்ளார்.

Story first published: Saturday, December 31, 2022, 19:13 [IST]
Other articles published on Dec 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+