Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னும் எத்தனை தடவை ஏமாத்துவீங்க.. இந்திய அணியை மீண்டும் மீண்டும் சோதனை செய்யும் இலங்கை

டெல்லி: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் புகை தொல்லை கொடுப்பதாக கூறி இலங்கை அணி பல முறை சண்டையிட்டு வருகிறது.

இலங்கை இந்தியாவின் வலிமையான இலக்கை அடைய பயந்து கொண்டு இப்படி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே சமயத்தில் இந்தியாவுக்கு எதிராக இதற்கு முன்பே இதேபோல் பல மோசமான செயல்களில் இலங்கை அணி ஈடுபட்டு இருக்கிறது.

முக்கியமான பல போட்டிகளில் இலங்கை அணி இந்திய அணியை ஏமாற்ற முயன்று இருக்கிறது.

கொல்கத்தா டெஸ்ட்

கொல்கத்தா டெஸ்ட்

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி இலங்கைக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருந்தது. இந்த போட்டியில் முதலில் இலங்கை அணி தோற்கும் நிலைமையில் இருந்தது. இதையடுத்து இலங்கை வீரர் நிரோஷன் திக்வெல்லா நேரத்தை கடத்துவதற்காக பேட்டிங் பிடிக்காமல் நின்று கொண்டு இருந்தார். மேலும் பந்து போட பாதி தூரம் வந்த பின் பேட்டிங் பிடிக்காமல் பின் வாங்கினார். இதனால் இந்த போட்டி டிராவில் முடிந்தது. இலங்கை வீரர்களின் இந்த மோசமான செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சேவாக்கிற்கு நடந்த கொடுமை

சேவாக்கிற்கு நடந்த கொடுமை

2010ல் ஆகஸ்ட் மாதம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நடந்த போட்டியில் இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது சேவாக் 99 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தார். இந்தியா வெற்றி பெற ஒரு ரன் தேவைபட்டது. அதே சமயத்தில் சேவாக் செஞ்சுரி அடிக்கவும் ஒரு ரன் தேவைப்பட்டது. ஆனால் இலங்கை பவுலர் சூரஜ் ரந்தீவ் வேண்டுமென்றே நோ பால் போட்டு போட்டியை முடித்தார். சேவாக் அந்த பாலில் சிக்ஸ் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குலியும் பாதிக்கப்பட்டார்

கங்குலியும் பாதிக்கப்பட்டார்

இதேபோன்ற சம்பவம் கங்குலிக்கும் சரியாக நடந்தது. 2001ல் நடந்த போட்டியில் கைஃப் பேட்டிங் பிடித்துக் கொண்டு இருந்தார். அதே சமயத்தில் கங்குலில் 98 ரன்களுடன் எதிர் பவுலிங் எண்டில் இருந்தார். இந்த போட்டியில் கடைசியாக பந்துவீசிய சமிந்தா வாஸ் சரியாக அந்த பந்தில் வைட் புல் டாஸ் போட்டு வீட்டுக் கொடுத்தார். இதனால் அந்த டெஸ்ட்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் கங்குலி 98 ரன்களுடன் அப்படியே அவுட் ஆகாமல் பெவிலியன் திரும்பினார்.

உலகக் கோப்பையில் பொய்

உலகக் கோப்பையில் பொய்

இன்னும் கிரிக்கெட் உலகில் தீராத பிரச்சனையாக இது இருந்து வருகிறது. 2011 நடந்த உழைக்க கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இலங்கை கேப்டன் டாஸில் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. முதலில் 'ஹெட்' கேட்காமல் பின் ஹெட் கேட்டதாக கூறி இருக்கிறார். உலகக் கோப்பை இறுதி போட்டியில் டாஸ் வெல்லும் அணியே போட்டியில் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை இருந்ததால் அவர் அப்படி ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

Story first published: Monday, December 4, 2017, 13:07 [IST]
Other articles published on Dec 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+