Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: உலகிலேயே எந்த பேட்ஸ்மேனும் செய்யாத டக் அவுட் - செஞ்சுரி சாதனையை செய்த ட்ராவிஸ் ஹெட்

பிரிஸ்பேன்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் சதம் அடித்து அசத்தி இருக்கிறார். இந்த சதம் மூலம் அவர் விசித்திரமான சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ட்ராவிஸ் ஹெட் காபா மைதானத்தில் இதற்கு முன் ஆடிய மூன்று டெஸ்ட் இன்னிங்ஸ்களில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி விக்கெட்டை இழந்து இருந்தார்.

ind vs aus border gavaskar trophy india vs australia test match vs

இந்த ஆண்டின் துவக்கத்தில் இதே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து இருந்தார். இதன் மூலம், "கிங் பேர்" (King Pair) என அழைக்கப்படும் மோசமான சாதனையை செய்து இருந்தார்.

அதாவது தான் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆவது "பேர்" (Pair) என அழைக்கப்படுகிறது. அதிலும் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆவது "கிங் பேர்" என அழைக்கப்படுகிறது. இந்த மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் செய்து இருந்தார் ட்ராவிஸ் ஹெட்.

காபா மைதானத்தில் ஆடிய அதற்கு முந்தைய இன்னிங்க்ஸிலும் அவர் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி இருந்தார். தொடர்ந்து மூன்று இன்னிங்ஸ்களில் காபா மைதானத்தில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி இருந்ததை அடுத்து காபா மைதானம் ட்ராவிஸ் ஹெட்டுக்கு ராசி இல்லாத மைதானம் என்ற எண்ணம் இருந்தது.

இந்த நிலையில் அவர் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அதே காபா மைதானத்தில் சதம் அடித்து அசத்தி இருக்கிறார். இதன் மூலம் விசித்திரமான ஒரு சாதனையை செய்து இருக்கிறார்.

ஒரே ஆண்டில் ஒரு மைதானத்தில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகி பின், அதே மைதானத்தில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார் ட்ராவிஸ் ஹெட். மேலும், ஒரே ஆண்டில் ஒரு மைதானத்தில் "கிங் பேர்" முறையில் டக் அவுட் ஆகி, பின் அதே மைதானத்தில் சதம் அடித்த வீரர்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் ட்ராவிஸ் ஹெட் செய்து இருக்கிறார்.

Story first published: Sunday, December 15, 2024, 11:53 [IST]
Other articles published on Dec 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+