Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

களத்தில் பேச்சே கிடையாது.. இனி வீச்சு தான்.. நாங்க மாறிட்டோம்!! சொல்கிறார் இந்த ஆஸ்திரேலிய வீரர்

சிட்னி : ஆஸ்திரேலிய அணி அடுத்து இந்திய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.

அதற்கு முன்பாக முந்தைய ஆஸ்திரேலிய அணியின் ஆக்ரோஷமான கள செயல்பாடுகள் குறித்தும், கோலியின் உரசல்கள் குறித்தும் நிறைய பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர் ட்ராவிஸ் ஹெட், "வார்த்தைகள் சில சமயம் மதிப்பில்லாதது. செயலில் தான் ஆக்ரோஷம் இருக்க வேண்டும்" என கூறி உள்ளார்.

சர்ச்சை வேண்டாம்

சர்ச்சை வேண்டாம்

பந்து சேத விவகாரத்தில் சிக்கி ஆஸ்திரேலிய அணி பொலிவிழந்து காணப்படுகிறது. இந்நிலையில், அதை மாற்றும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் சர்ச்சையில் சிக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

முந்தைய சர்ச்சைகள்

முந்தைய சர்ச்சைகள்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்த முந்தைய கிரிக்கெட் தொடர்களில் எல்லாம் ஏதேனும் சர்ச்சை வெடித்து விடும். முதலில் வார்த்தை உரசல்களாக இருந்து, பின்னர் ஹர்பஜன் - சைமண்ட்ஸ் சர்ச்சை, ஆஸ்திரேலிய ரசிகர்களை பார்த்து கோலியின் சைகை, ஸ்டீவ் ஸ்மித்தின் "பிரைன் ஃபேட்" சர்ச்சை என வளர்ந்து வந்தது.

இனி வார்த்தை இல்லை

இனி வார்த்தை இல்லை

இந்நிலையில் இந்த முறை இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். பந்துவீச்சு, அதிக ரன்கள் அடித்து அழுத்தம் கொடுப்பது போன்ற கிரிக்கெட் செயல்களில் மட்டுமே ஆக்ரோஷமாக இருப்போம் என ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் கூறியுள்ளார்.

கோலி அமைதியாக இருப்பாரா?

கோலி அமைதியாக இருப்பாரா?

மேலும், புன்னகையுடன் இருப்பதன் மூலம் பல உரசல்களை, சர்ச்சைகளை தவிர்க்கலாம் எனவும் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர்கள் அமைதியாக இருந்தாலும் கோலி அமைதியாக இருப்பாரா என்பதே பலரின் சந்தேகம். கோலி ஒவ்வொரு முறை ஆஸ்திரேலியா வரும் போதும் மற்ற எந்த நாட்டை விடவும் அதிக ஆக்ரோஷமாக நடந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, December 3, 2018, 19:14 [IST]
Other articles published on Dec 3, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+