Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய மாற்றம்.. வார்னருக்கு இப்படி ஒரு நிலைமையா.. ஆஸி. அணி எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் பெஞ்ச் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக டிராவிஸ் ஹெட் அணியில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 92 ரன்களுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் சுருண்டனர்.

மொத்தமாக முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 8 விக்கெட்டுகளையும், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேபோல் ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சாளர்களை எப்படி எதிர்கொள்வது என்று அறியாமல் திண்டாடியது கண்கூடாக தெரிந்தது.

 ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியா அணி

அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு, அணித் தேர்வும் முக்கிய காரணமாக அமைந்தது. இடதுகை வீரரும், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசயில் முன்னிலையில் இருக்கும் டிராவிஸ் ஹெட்டை வெளியில் அமரவைத்துவிட்டு, ரென்ஷா தேர்வு செய்யப்பட்டது விமர்சனத்திற்குள்ளானது.

 வார்னர் வெளியேற்றம்?

வார்னர் வெளியேற்றம்?

இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடும் டிராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் டிராவிஸ் ஹெட்டிற்கு இடமளிக்கும் வகையில், டேவிட் வார்னரை பெஞ்ச் செய்ய ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 சொதப்பல்

சொதப்பல்

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அவர் வெளிநாட்டு ஆடுகளங்களில் விளையாடும்போது அவருடைய மோசமான ஃபார்மே தொடர்கிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளிக்காததால் பெரிய அளவிலான ஸ்கோரை ஆஸ்திரேலியாவால் எடுக்க முடியவில்லை.

 பிராட் - அஸ்வின்

பிராட் - அஸ்வின்

ஏற்கனவே ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் பிராடிடம் தொடர்ந்து ஆட்டமிழந்து வார்னர் விமர்சனத்துள்ளானார். அதேபோல் இந்திய மண்ணில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினின் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ள வார்னர் அதிகமாக திணறி வருகிறார். இதன் காரணமாக வார்னரை வெளியில் அமர வைக்க ஆஸ்திரேலியா அணி முடிவு செய்துள்ளது. நடப்பாண்டு இறுதியில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவிப்பேன் என்று வார்னர் கூறி இருந்தார். ஆனால் இந்திய பயணத்திற்கு பின் வார்னர் ஓய்வை அறிவிப்பார் என்று சமூகவலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.

Story first published: Sunday, February 12, 2023, 14:43 [IST]
Other articles published on Feb 12, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+