Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND VS NZ : கோலியை காலி செய்த நியூசி.யின் பக்கா பிளான்...! 3வது ஓவரில் நிகழ்ந்த அந்த மாற்றம்

Recommended Video

கோலியை காலி செய்த நியூசி.யின் பக்கா பிளான்...!

மான்செஸ்டர்: உலக கோப்பை அரையிறுதியில் கேப்டன் கோலியின் பேட்டிங் திறனை மிக சரியாக களத்தில் திட்டமிட்டு அவரது விக்கெட்டை காலி செய்திருக்கிறது நியூசிலாந்து.

உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மான்செஸ்டரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்த போது மழை வந்தது.

அதனால் ஆட்டம் தடைபட்டது. மழையின் தாக்கம் மேலும் அதிகமானதால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை எழுந்தது. இதையடுத்து ரிசர்வ் டே எனப்படும் அடுத்த நாளான இன்று தொடங்கியது.

கூடுதலாக 27 ரன்கள்

கூடுதலாக 27 ரன்கள்

அதன்படி, எஞ்சிய போட்டி இன்று தொடங்கியது. புவனேஷ்வர் குமார் தமது பவுலிங்கை தொடர்ந்தார். எஞ்சிய 23 பந்துகளில் 27 ரன்கள் அடித்த நியூசிலாந்து அணி 239 ரன்களுக்கு இன்னிங்சை முடித்தது. 240 ரன்கள் எடுத்தால் இந்தியா பைனலுக்குச் செல்லலாம்.

அதிர்ச்சியோ, அதிர்ச்சி

அதிர்ச்சியோ, அதிர்ச்சி

அதற்காக, இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா, ராகுலுடன் களம் இறங்கினார். ஹென்ரி வீசிய 2வது ஓவரில் இருந்து இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடங்கியது. அந்த பந்தில் ஒரு ரன்னுடன் வெளியேறினார் ரோகித். அதற்கு அடுத்த ஓவரில் வந்தார் போல்ட். எல்பிடபிள்யூ ஆகி விக்கெட்டை இழந்தார் கோலி.

பக்காள பிளான்

பக்காள பிளான்

இந்த போட்டியில் கோலியின் விக்கெட் தான் மாஸ் என்று சொல்லலாம். அவரது விக்கெட்டை விரைவாக எடுக்க வேண்டும் என்று நியூசி. அணியினர் பக்கா பிளான் வைத்திருந்தது என்பது இன்றைய போட்டியிலேயே தெரிந்தது. அந்த அளவுக்கு போல்டின் பந்து வீச்சு இருந்தது.

அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப்

அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப்

அவரது முதல் இரண்டு பந்துகள் புல் லென்த்தில் வீசப்பட்டன. அவுட் சைட் தி ஆப் ஸ்டம்ப்பில் பிட்சானது. பொதுவாக இது போன்ற பந்துகள் வந்தால் கோலி டிரைவ் ஷாட் ஆடுவார். இந்த பந்து அவரை அது போன்ற ஆட வேண்டும் என்று உந்தி தள்ளியது. 3வது பந்தை மிடில் ஸ்டம்ப்பில் பிட்ச் செய்தார் போல்ட்.

மாறிய பவுலிங்

மாறிய பவுலிங்

கோலி ரிஸ்ட்டை சுழற்றி அழகாக தடுத்து விளையாண்டார். அதாவது அதிரடியாக ஆட போவதில்லை... கொஞ்சம் அடக்கி வாசித்து விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்பதாகும். அதை உஷாராக புரிந்து கொண்ட போல்ட் தமது பவுலிங் பாணியை சற்றே மாற்றினார்.

லைனை மாற்றிய போல்ட்

லைனை மாற்றிய போல்ட்

அதாவது மணிக்கட்டை பயன்படுத்தி லெக் சைடில் அவரை ஆட வைக்க வேண்டும் என்பேதே அந்த திட்டம். அது தான் பலித்தது. அதே லென்த்தில் கொஞ்சம் லைனை மட்டும் மாற்றி பந்து வீச, கோலி அதை எதிர்பார்க்க வில்லை.

கோலி அவுட்

கோலி அவுட்

ஆனாலும், லெக் ஸ்டம்ப் லைனில் பிட்சாகி வந்த பந்தை மணிக்கட்டை சுழற்றி ஆடத் தயாரானார் கோலி. பந்து அவர் எதிர்பார்த்தபடி பேட்டுக்கு வரவில்லை. நேராக கால் காப்பில் புகுந்தது. அம்பயர் அவுட் கொடுக்க நியூசிலாந்து வீரர்கள் உற்சாகம் அடைந்தனர்.

ரிவ்யூவிலும் அவுட்

ரிவ்யூவிலும் அவுட்

தாம் ஆடியே ஆக வேண்டும் என்ற கட்டாயம்,நெருக்கடி இருந்ததால் உடனடியாக ரிவ்யூ எடுத்தார். அதில் பந்து உயரமாக சென்றது தெரிந்தது. ஆனால் பந்தின் கீழ் பகுதி கொஞ்சமாக ஸ்டம்பில் பட்டது. அது அம்பயர் கால் என்பதால் கோலியும் ஒரு ரன்னில் அதிருப்தியுடன் வெளியேறினார்.

Story first published: Wednesday, July 10, 2019, 17:48 [IST]
Other articles published on Jul 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+