Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BAN vs NZ: அட்டாக் பண்ணலாம்.. ஆனால் அவசர படக்கூடாது.. முதல் பந்திலேயே அவுட்.. தட்டித்தூக்கிய போல்ட்!

சென்னை: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் முதல் பந்திலேயே அவசரப்பட்டு ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார்.

உலகக்கோப்பை தொடரின் 11வது லீக் போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். நீண்ட நாட்களுக்கு பின் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கியதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

Trent Boult is the first New Zealand bowler to take a wicket on the first ball of the innings in the World Cup History

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அடைந்த காயத்திற்கு பின் கேன் வில்லியம்சன் நேரடியாக இந்த போட்டியில் தான் களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் வங்கதேச அணி தரப்பில் நட்சத்திர வீரர் லிட்டன் தாஸ் - தன்ஜித் கூட்டணி களமிறங்கியது. மறுபக்கம் நியூசிலாந்து அணி தரப்பில் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார்.

முதல் பந்தை லெந்த் பாலாக போல்ட் வீசிய நிலையில், லிட்டன் தாஸ் அவரை அட்டாக் செய்ய நினைத்து ஸ்கொயர் திசைக்கு பின் தூக்கி அடிக்க, அங்கு நின்றிருந்த மேட் ஹென்ரி பறவையை போல் சரியான டைமிங்கில் கேட்ச் பிடித்து அசத்தினார். போல்டை அட்டாக் செய்ய நினைத்த லிட்டன் தாஸ், அவரின் இன்ஸ்விங்கரை கணிக்காமல் தூக்கி விளாசியதே அவர் ஆட்டமிழக்க காரணமாக அமைந்தது.

கிட்டத்தட்ட போல்டின் இந்தப் பந்து உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் பேர்ஸ்டோவிற்கு வீசிய அதே பந்தை தான் போல்ட் வீசினார். அதேபோல் தற்போது போல்ட் வீசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடரில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் போல்ட் பெற்றுள்ளார்.

லிட்டன் தாஸ் ஆட்டமிழந்ததை கவனித்த ரசிகர்கள் பலரும், அட்டாக் செய்ய நினைத்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் லிட்டன் தாஸ் அவசரத்தில் விக்கெட்டை இழந்து சென்றுள்ளதாக விமர்சித்து வருகின்றனர். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை பிட்சில் நியூசிலாந்து அணிக்கு வங்கதேசம் சவால் அளிக்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், தொடக்கத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது.

Story first published: Friday, October 13, 2023, 15:21 [IST]
Other articles published on Oct 13, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+