Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட்ல முதலிடம் கிடைச்சா அதவிட சிறப்பானது எது இருக்கு... டிரெண்ட் போல்ட் உற்சாகம்!

வெல்லிங்டன் : மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.

இந்த போட்டியில் வெற்றி கொண்டால், டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு நியூசிலாந்து வரும். இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிட்டு 3வது இடத்திற்கு முன்னேறும்.

இந்நிலையில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பெறுவது சிறப்பானது என்று நியூசிலாந்து அணியின் பௌலர் டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

முதலிடத்திற்கு முன்னேறும் நியூசிலாந்து

முதலிடத்திற்கு முன்னேறும் நியூசிலாந்து

தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து விளையாடி வருகிறது. இதன் இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி கொள்ளும்பட்சத்தில் நியூசிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெறும்.

சிறப்பான சாதனை

சிறப்பான சாதனை

இந்த சாதனையை எட்டும்பட்சத்தில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை முதல்முறையாக நியூசிலாந்து பெறும். இந்நிலையில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை பெறுவது மிகவும் சிறப்பான சாதனை என்று நியூசிலாந்து பௌலர் டிரெண்ட் போல்ட் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

போல்ட் உற்சாகம்

போல்ட் உற்சாகம்

கடந்த சில தொடர்களில் சிறப்பாக விளையாடியதற்கான ஊதியமாக இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக நியூசிலாந்து மற்றும் மற்ற நாடுகளில் டெஸ்ட் தொடரில் விளையாடி பெற்ற வெற்றிகள் மிகவும் சிறப்பானது என்றும் தனக்கு மிகவும் பிடித்தமான வடிவம் டெஸ்ட் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3வது இடத்திற்கு முன்னேறும்

3வது இடத்திற்கு முன்னேறும்

நியூசிலாந்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பேசிய டிரெண்ட் போல்ட், இந்த சாதனையை நியூசிலாந்து எட்டினால் அது மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த சாதனையை எட்டும்பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் இங்கிலாந்தை கீழிறக்கிவிட்டு 3வது இடத்திற்கு நியூசிலாந்து தாவும்.

Story first published: Sunday, December 13, 2020, 14:40 [IST]
Other articles published on Dec 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+