
பாகிஸ்தான் தடுமாற்றம்
முகமது ரிஸ்வான் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகளை விளாசினாலும், பின்னர் தடுமாறி 17 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் அசாமும் 23 பந்துகளை எதிர்கொண்ட 21 ரன்களை மட்டுமே சேர்த்தார். ஷான் மசூத் 14 ரன்களிலும், ஷதாப் கான் 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 77 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது.

அபார பந்துவீச்சு
இறுதியில் இஃப்திகார் அகமது 27 ரன்களிலும், ஆசிப் அலி 25 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் மைக்கேல் பிராஸ்வெல் 4 ஓவர்கள் 11 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

6 சிக்சர்
இதனைத் தொடர்ந்து 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி வீரர்கள் ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறிப்பாக அவர் 6 சிக்சர்களை விளாசினார். இதில் 42 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். மறுமுனையில் கான்வே பொறுமையாக விளையாடி46 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார்.

நியூசிலாந்து வெற்றி
இறுதியில் வில்லியம்சன் 9 ரன்கள் சேர்க்க, நியூசிலாந்து அணி 16.1 வது ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த இன்னிங்ஸ் மூலம் ஃபின் ஆலம், டி20 உலககோப்பை தொடரில் தனது இடத்தை உறுதி செய்து கொண்டார். பாகிஸ்தான் அணி பேட்டிங்கும், பந்துவீச்சும் டி20 உலககோப்பை தொடருக்கு முன் சொதப்புவது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











