கடைசி பந்து வரை த்ரில்லிங்.. பாகிஸ்தான் மானத்தை காப்பாற்றிய ரிஸ்வான்.. வங்கதேசத்திடம் போராடும் நிலை
கிறிஸ்ட்சர்ச்: முத்தரப்பு டி20 தொடரில் வங்கதேசத்திடம் பாகிஸ்தான் போராடி வெல்லும் நிலை ஏற்பட்டது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு நியுசிலாந்தும், பாகிஸ்தானும் தகுதி பெற்றது.
இதனால் இது சம்பிரதாய ஆட்டமாக நடைபெற்றது. எனினும் வங்கதேசத்திற்கும், பாகிஸ்தானுக்கும் பழைய பகை எஞ்சி இருப்பதால், இன்றைய ஆட்டம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்றது.
இதனால் பாகிஸ்தான் அணி முழு பலத்துடன் களமிறங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதிரடி பார்ட்னர்ஷிப்
தொடக்க வீரராக களமிறங்கிய நஜிமுல் ஹூசைன் 12 ரன்களிலும், சௌமியா சர்கார் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, லிட்டன் தாஸ் மற்றும் ஷகிபுல் ஹசன் ஜோடி சேர்ந்து, அதிரடியாக விளையாடி பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி அளித்தனர். 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 80 ரன்களை சேர்த்தது.

174 ரன்கள் இலக்கு
இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வங்கதேச புலிகளான லிட்டன் தாஸ் 69 ரன்களும், ஷகிபுல் ஹசன் 68 ரன்களும் எடுத்தனர். எனினும் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, வங்கதேச அணி சற்று சரிவை சந்தித்தது. 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.

அரைசதம்
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் வழக்கம் போல் ரிஸ்வான், பாபர் அசாம் ஜோடி இணைந்து நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 46 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாபர் அசாம் 40 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

போராடி வெற்றி
ரிஸ்வான் 42 பந்தில் தான் அரைசதம் கடந்தார். முகமது நவாஸ் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒரு கட்டத்தில் பந்துக்கும், ரன்களுக்கும் உள்ள வித்தியாசம் குறைந்தாலும், பாகிஸ்தான் அதனை எடுக்க திணறியது. முகமது ரிஸ்வான் 69 ரன்களில் 19வது ஓவரில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. . அப்போது ஒரு பந்து எஞ்சிய நிலையில் பாகிஸ்தான் வெற்றி இலக்கை எட்டியது.


Click it and Unblock the Notifications