Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சத்தியமா நம்ப முடியல.. வார்னேவின் மறைவுக்கு கிரிக்கெட் உலகம் அஞ்சலி.. சச்சின் கண்ணீர்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் வார்னே மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 52.

Recommended Video

Legendary Shane Warne passes away at 52 after heart attack

தாய்லாந்திற்கு இன்ப சுற்றுலா சென்ற போது வார்னேவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது முதல் கட்ட தகவலாக வெளிவந்துள்ளது.

வார்னேவின் திடீர் மறைவு கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வார்னேவின் மறைவுக்கு பல பிரபலங்கள் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.

சச்சின் கண்ணீர்

சச்சின் கண்ணீர்

வார்னேவின் மறைவு அதிர்ச்சி அளிப்பதாகவும், நம்ப முடியவில்லை என்றும் சச்சின் தெரிவித்துள்ளார். துயரம் தொண்டையை அடைப்பதாக குறிப்பிட்டுள்ள சச்சின், வார்னேவுன் கழித்த பொழுது என்றும் மறக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். களத்தில் நமக்குள் இருந்த போட்டிகள் எனக்கு பொக்கிஷம் போன்றவை. உங்கள் மனதில் இந்தியாவுக்கு தனி இடம் உள்ளது. இந்தியர்கள் மனதில் உங்களுக்கு எப்போதும் தனி இடம் உள்ளது. விரைவில் எங்களை விட்டு போய் விட்டீர்கள் என்று சச்சின் தெரிவித்துள்ளார்.

பிரைன் லாரா அதிர்ச்சி

பிரைன் லாரா அதிர்ச்சி

என்னால் தற்போது பேச முடியவில்லை. அதிர்ச்சியில் உள்ளேன் என்று வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா கூறியுள்ளார். எனது துயரத்தை வார்த்தையால் கூற முடியவில்லை. என்னுடைய நண்பன் சென்றுவிட்டான். வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரரை நாம் இழந்துவிட்டோம். உங்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு என் இரங்கல்கள் என்று பிரைன் லாரா பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி இரங்கல்

விராட் கோலி இரங்கல்

வார்னே மறைவு குறித்து பதிவிட்டுள்ள விராட் கோலி, வாழ்க்கை யூகிக்க முடியவில்லை. இந்த இழப்பை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. உங்களை கிரிக்கெட்டுக்கு வெளியேவும் நன்கு தெரியும். நமது விளையாட்டில் சிறந்த வீரர் சென்றுவிட்டார். பந்தை உங்களை போல் வேறு யாரும் திருப்பியது அல்ல.

ரோகித் உருக்கம்

ரோகித் உருக்கம்

இதே போன்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெளியிட்டுள்ள பதிவில், இது என்னால் நம்ப முடியவில்லை. வாயடைத்து நிற்கின்றேன். கிரிக்கெட்டின் ஜாம்பவான், வரலாற்றின் சிறந்த வீரர் நம்மை விட்டு போய்விட்டார். இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

வார்னேவின் மறைவு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இவ்வளவு சின்ன வயதில் சென்று விட்டார். கிரிக்கெட் ரசிகர்களுக்கும், அவருடன் விளையாடிய வீரர்களுக்கும், வார்னேவின் குடும்பத்தினருக்கும் என் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, March 4, 2022, 21:47 [IST]
Other articles published on Mar 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+