Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெய்ல் புயலைத் தூக்கிச் சாப்பிட புதுப் புயல் வந்தாச்சு!

டிரினிடாட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி வீரர் என்றால் இப்போதைக்கு எல்லோரது நினைவிலும் முதலில் வருவது கிறிஸ் கெய்ல்தான். இப்போது அவருக்கு புது சவால் வந்து விட்டது.

23 வயதேயான டிரினிடாட் டொபாகோவைச் சேர்ந்த இராக் தாமஸ்தான் அந்த புதுப் புயல். அட்டகாசமாக ஆடி வருகிறார் இந்த இளம் புயல். அதிலும் டி20 போட்டிகளில் அதி வேக சதம் போட்ட கெய்லின் சாதனையையும் இவர் முறியடித்துள்ளார்.

21 பந்துகளில் சதத்தைப் போட்டு அசத்தியுள்ளார் தாமஸ். பிரையன் லாராவும் டிரினிடாட் டோபாகோவைச் சேர்ந்தவர்தான் என்பது நினைவிருக்கலாம். எனவே லாரா போல தாமஸும் கிரிக்கெட் உலகில் அதிரடியாக அசத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

31- 131

31- 131

இராக் தாமஸ் டொபாகோ கிரிக்கெட் சங்கம் நடத்திய போட்டி ஒன்றில் ஆடியபோதுதான் இந்த சாதனையைப் படைத்தார். அவர் மொத்தம் 31 பந்துகளில் 131 ரன்களைக் குவித்து அசத்தினார்.

8 ஓவர்களில் ஓவர் ஓவர்!

8 ஓவர்களில் ஓவர் ஓவர்!

152 என்ற வெற்றி இலக்கைத் துரத்தி வந்த தாமஸ் ஆடிய அணி, தாமஸ் போட்ட போடால் எட்டு ஓவர்களிலேயே போட்டியை முடித்து வெற்றி பெற்று விட்டது.

புதிய சாதனை

புதிய சாதனை

21 பந்துகளில் சதம் என்பது டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை ஆகும். இதற்கு முன்பு இந்த சாதனை கெய்ல் வசம் இருந்தது.

கெய்ல் சாதனை

கெய்ல் சாதனை

கடந்த 2013 ஐபிஎல் தொடரின்போது புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் கெய்ல் 30 பந்துகளில் சதம் போட்டதே சாதனையாக இருந்தது.

மெக்கல்லம்- டிவில்லியர்ஸ் சாதனையும் காலி

மெக்கல்லம்- டிவில்லியர்ஸ் சாதனையும் காலி

கெய்ல் சாதனை மட்டுமல்லாமல் மெக்கல்லம், டிவில்லியர்ஸ் ஆகியோரது சாதனைகளையும் தகர்த்துள்ளார் தாமஸ். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 54 பந்துகளில் சதம் போட்டிருந்தார் மெக்கல்லம். அதேபோல 2015ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் டிவில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் போட்டிருந்தார். இவற்றையும் சேர்த்து தாமஸ் தகர்த்து விட்டார்.

15 சிக்ஸர்கள்

15 சிக்ஸர்கள்

தாமஸ் தனது ஆட்டத்தின்போது 15 சிக்ஸர்களை விளாசினார், பவுண்டரிகளின் எண்ணிக்கை 5 ஆகும். இதற்கு முன்பு இவர் 53 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Sunday, May 1, 2016, 14:16 [IST]
Other articles published on May 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+