Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டுபாக்கூர்தனமாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்... டிரினிடாட் டொபாகோ வென்றது

டெல்லி: டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த சாம்பியன்ஸ் லீக்கின் கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் சொதப்பலாக ஆடி டிரினிடாட் டொபாகோ அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

இந்தப் போட்டியில் சுரேஷ் ரெய்னா, முரளி விஜய் மற்றும் கேப்டன் டோணி ஆகியோரைத் தவிர வேறு யாரும் சொல்லிக் கொள்ளும்படி ஆடவில்லை.

ஏற்கனவே அரை இறுதிப் போட்டிக்கு சென்னை தகுதி பெற்று விட்டதால் நேற்றைய கடைசி லீக் போட்டியில் சென்னை வீரர்கள் அசட்டையாக ஆடியது போலவே இருந்தது.

டாஸ் டொபாகோவுக்கு

டாஸ் டொபாகோவுக்கு

டிரினிடாட் டொபாகோ அணி டாஸ் வென்று முதலில் சென்னையை ஆடப் பணித்தது.

1 ரன்னில் திரும்பிய ஹீரோ ஹஸ்ஸி

1 ரன்னில் திரும்பிய ஹீரோ ஹஸ்ஸி

ஆரம்பப் போட்டிகளில் அருமையாக ஆடிய மைக் ஹஸ்ஸி நேற்றைய போட்டியில் 1 ரன்னில் திரும்பினார்.

தாக்குப் பிடித்து ஆடிய முரளி விஜய்

தாக்குப் பிடித்து ஆடிய முரளி விஜய்

இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் சற்றே தாக்குப் பிடித்து ஆடினார். 24 பந்துகளைச் சந்தித்த அவர் 27 ரன்களைச் சேர்த்து வெளியேறினார்.

ரெய்னாவின் லைட் அதிரடி

ரெய்னாவின் லைட் அதிரடி

சுரேஷ் ரெய்னா சற்றே அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.29 பந்துகளைச் சந்தித்த அவர் 38 ரன்களைச் சேர்த்தார்.

25 பந்து.. 25 ரன்.. இது டோணி

25 பந்து.. 25 ரன்.. இது டோணி

கேப்டன் டோணி 25 பந்துகளைச் சந்தித்து 25 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார்.

பிறகு வரிசையாக அவுட்

பிறகு வரிசையாக அவுட்

அதன் பிறகு யாருமே சரியாக ஆடவில்லை. அத்தனை பேரும் சொல்லி வைத்தாற் போல ஒற்றை இலக்கத்துடன் பெவிலியன் திரும்பினர்.

19.4 ஓவர்களில் கதை முடிந்தது

19.4 ஓவர்களில் கதை முடிந்தது

19.4 ஓவர்களிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கதை முடிந்தது. அத்தனை விக்கெட்களையும் இழந்த அந்த அணி, 118 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது.

மோசமான ஆட்டம்

மோசமான ஆட்டம்

நடப்புத் தொடரில் சென்னை அணி வெளிப்படுத்திய மோசமான ஆட்டம் இதுதான்.

டாப்புக்கு முன்னேறியது

டாப்புக்கு முன்னேறியது

இந்த வெற்றியின் மூலம் நெட் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தையும் பிடித்து அரை இறுதிக்குள் நுழைந்தது டொபாகோ அணி.

மும்பையுடன் அரை இறுதியில் மோதல்

மும்பையுடன் அரை இறுதியில் மோதல்

வருகிற சனிக்கிழமை நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸை சந்திக்கிறது டொபாகோ அணி.

முதல் அரை இறுதியில் சென்னை, ராஜஸ்தான் மோதல்

முதல் அரை இறுதியில் சென்னை, ராஜஸ்தான் மோதல்

முதல் அரை இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்கவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

Story first published: Thursday, October 3, 2013, 8:42 [IST]
Other articles published on Oct 3, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+