Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னமா கூவுறாண்டா, அதுவும் வித்தியாசமா கூவுறாண்டா அவன்.... வங்கதேசத்தை "வறுக்கும்" வீடியோ!

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஒருபக்கம் சூடுபிடித்தாலும், அதைவிட அதிகமாக பொறி பறப்பது சமூக வலைதளங்களில் உலவும் காமெடி போஸ்ட்களும், வீடியோக்களும்தான்.

அதில் சமீபத்தில் சிக்கியிருப்பது இங்கிலாந்து அணியினை வங்கதேசம் ஜெயித்தபோது ரசிகர்களின் ரியாக்‌ஷனுக்கு, பதிலடி கொடுக்கும் தமிழ் சினிமா காமெடிகளும் இணைந்த வீடியோ ஒன்று.

வீடியோவைப் பார்த்தால் கண்டிப்பாக இடைவிடாத சிரிப்புக்கு நாங்க "கேரண்டி"...

Troll video about ICC world cup India – Bangladesh…

அகாங் அப்டியாடா கண்ணா:

இங்கிலாந்தை வங்கதேசம் ஜெயித்த குஷியில் ஒரு வங்கதேச ரசிகர் "எங்களால இனி எந்த பெரிய நாட்டையும் ஜெயிக்க முடியும்" அப்படிங்கறார். அதுக்கு நம்ம தானைத் தலைவர் வடிவேலுவின் "ஆகாங்" ரியாக்‌ஷனைப் போட்டுத் தாக்கியுள்ளனர்.

தம்பி கருத்தா பேசுவாப்ல:

இன்னொரு ரசிகரோ "பங்களாதேஷ் பைனல் மேட்சில் ஆஸ்திரேலியாவுடன் மோத வேண்டும்" என்கின்றார். அதுக்கு நம்ம கவுண்டரின் "பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா?"வைப் போட்டு கவுண்ட்டர் கொடுத்துள்ளார் வீடியோ மேக்கர்.

ஓட வைக்கிறாங்களாம் ஓட:

அந்த ரசிகர் ஆர்வக் கோளாறு அதிகமாகி, "குவாட்டர் பைனல்ஸில் இந்தியாவுடன் மோதி அவர்களை இந்தியாவுக்கே ஓடச் செய்வோம்" என்கிறார். அதுக்கு மறுபடி நம்ம வடிவேலு "எடு செருப்ப.." என்று சொல்லும் காட்சி வந்து நம்மை கலகலக்க வைக்கின்றது.

ஹய்யோ, ஹய்யோ:

"அதுக்கப்புறம் நாங்க பைனல்ஸில் ஆஸ்திரேலியாவோட மோதுவோம்ல" என்கிறார் பங்களாதேஷ் விசுவாசி... அதுக்கு நம்ம "பாட்டாளி" வடிவேலு "இந்த ரெண்டுல ஒன்னு நடந்தாலும் உலகம் அழிஞ்சுரும்" என்று பொம்பளைக் குரலில் கூறும் காட்சி வந்து குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைக்கின்றது.

முடிலைடா சாமி நிறுத்திக்குவோம்:

"இனி எங்களால என்ன வேணாலும் செய்ய முடியும் இந்த வேர்ல்ட் கப்ல... நாங்கதான் சாம்பியன் ஆவோம்" அப்படினு ஒருத்த கூவுறார். அதுக்கு நம்ம லிவிங்ஸ்டன் "என்னமா கூவுறாண்டா அவன்... அதுவும் வித்தியாசமா கூவுறாண்டா அவன்" அப்படினு நா தழுதழுக்க கூறும்போது நமக்கு வயிற்றில் இருக்கும் குடலே வெளியில் வந்துரும்போல சிரிச்சு, சிரிச்சு.

பச்சை சட்டைக்காரனுக்கு கொழுப்பு ஜாஸ்தி:

மறுபடி அந்த பச்சை சட்டை ரசிகர் சொல்லும் "இந்தியாவை திருப்பு அனுப்புவோம்" என்பதற்கு, வடிவேலு, சுந்தர் சியின் காட்சியில் வடிவேலுவின் மேல் வங்கதேசம் என்றும், சுந்தர் சியின் மேல் இந்தியா என்றும் கொட்டேன்ஷன் போட்டு "ரியாலிட்டி" என்று புகுந்து விளையாடியுள்ளார் வீடியோவினை வடிவமைத்துள்ள பார்த்திபன் என்பவர்.

கொஞ்சம் ஓவராத்தான் போய்கிட்டு இருக்கு:

பங்களாதேஷ் இந்தியாவிடம் சாரி... சாரி... வடிவேலு, சுந்தர் சியிடம் "அய்யயோ வேணாம்பா ஒன்லி பாடிலாங்குவேஜ்தான் உள்ள ஒன்னும் கிடையாதுப்பா... நீ நினைக்கற அளவுக்கு நான் ஒன்னும் பைட்டர் கிடையாதுப்பா ஒன்லி பில்டப்தான்ப்பா" என்று சரணடையும் சீனைப் போட்டு சிரிப்புச் சரவெடியைக் கொளுத்தி விட்டுள்ளனர் வீடியோவில்.

மேற்படி, இங்கிலாந்தினை வீழ்த்தியுள்ள வங்கதேசம் காலிறுதியில் இந்தியாவுடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, March 16, 2015, 15:33 [IST]
Other articles published on Mar 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+