இன்னும் ஒரு போட்டியில் தோற்றாலும் போச்சு... நெருக்கடியில் இங்கிலாந்து... டென்ஷனில் ரூட்
மும்பை: சென்னையில் நடைபெற்ற 2வதுட் டெஸ்டில் தோல்வியடைந்ததால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைவதில் இங்கிலாந்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டியையும் பிரபலபடுத்த வேண்டும் என்பதற்காக 2019ம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியானது இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் வருகிற ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது.
இதில் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே நியூசிலாந்து அணி சென்று விட்ட நிலையில், மற்றொரு அணியாக இங்கிலாந்து மற்றும் இந்திய அணி நுழைவதற்கான சாத்திய கூறுகள் பிராகசமாக உள்ளன.

முதல் அணி
கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணி சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் அணிகளைத் தனது சொந்த மண்ணில் வீழ்த்தி, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு இடத்திற்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

சிக்கல்
4 போட்டிகள் கொண்ட நடப்பு தொடர் 1 - 1 என சம நிலையில் உள்ளதால் இங்கிலாந்து அணி 3-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதனால் அடுத்த 2 போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழையும் வாய்ப்பு போகும்.

வாய்ப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் 1 -1 என சம நிலையில் உள்ளதால் இந்திய அணி இன்னும் 2-1, 3-1 என்ற ஏதோ ஒரு புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றால் போதும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட முடியும்.

ஆஸ்திரேலியாவுக்கும் வாய்ப்பு
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் மூலம் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கும் முன்னேற முடியும். 2 - 1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றாலோ அல்லது 2 -2, 1 - 1 என தொடர் சமன் அடைந்தாலோ, ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு செல்லும்.


Click it and Unblock the Notifications