அஸ்வினால் பாதிக்கப்பட்ட முகமது ஷமி.. டி20 உலகக்கோப்பை அணியில் இருந்து ஒதுக்கியது இதனால் தான்- விவரம்
மும்பை: டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து முகமது ஷமி ஓரம்கட்டப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
Recommended Video
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ள டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது.

இந்திய அணி தேர்வு
ஆசிய கோப்பை தொடருக்கு தேர்வான பேட்டிங் வரிசையே இந்த அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பவுலிங் படையில் தான் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களுடன் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் என மொத்தம் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஷமி திடீர் நீக்கம்
இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி அணியில் இடம்பெறவில்லை. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய களத்தில் கூடுதலாக ஷமியும் தேவை என வல்லுநர்கள் கூறினர். அதன்படி அணி தேர்வின் போது அவரின் பெயர் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் திடீரென அவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

காரணம் என்ன
அவரின் நீக்கத்திற்கு காரணம் அஸ்வின் தான். 5வது வேகப்பந்துவீச்சாளருடன் செல்ல வேண்டும் என தேர்வுக்குழு முடிவெடுத்தது. ஆனால் அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் வெயில் காலம் என்பதால் சுழற்பந்துவீச்சுக்கு உதவும். எனவே அனுபவ வீரர் அஸ்வினா? அல்லது ஷமியா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்போது ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அஸ்வினின் பக்கம் சாய்ந்ததால், ஷமி நீக்கப்பட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
எனினும் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் பழைய ஃபார்மில் இருக்கிறார்களா? என்பது சந்தேகம் தான். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷமியை பேக் அப் வீரராக சேர்த்துள்ளனர். மேலும் அடுத்து வரக்கூடிய ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் ஷமி விளையாடுகிறார். ஒருவேளை ஏதேனும் ஒரு பவுலர் சொதப்பினாலும் கூட ஷமியை மெயின் அணியில் கொண்டு வருவார்கள்.


Click it and Unblock the Notifications