செம டிரிக்.. இந்திய அணியின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்த மாஸ்டர்பிளான்.. ஷாக் திருப்பம்!
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி உருவாக்கி இருந்த அகமதாபாத் பிட்ச் தற்போது இந்திய அணிக்கே எதிராக திரும்பி உள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் தீவிரமாக நடந்து வருகிறது. 3வது டெஸ்டில் 6வது விக்கெட்டை இழந்து இந்திய அணி போராடி வருகிறது.
இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் தற்போது பேட்டிங் செய்து வருகிறார்கள்.

எப்படி
இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி உருவாக்கி இருந்த அகமதாபாத் பிட்ச் தற்போது இந்திய அணிக்கே எதிராக திரும்பி உள்ளது. அகமதாபாத்தில் இருக்கும் இந்த பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டு இருந்தது. புற்கள் எல்லாம் அகற்றப்பட்டு களிமண் வைத்து பிட்ச் உருவாக்கப்பட்டது.

ஸ்பின்
இதனால் பந்து எளிதாக ஸ்பின் பவுலிங்கிற்கு உதவியது. இதன் காரணமாக இந்திய அணியில் அக்சர் பட்டேல், அஸ்வின் ஆகியோர் அதிக விக்கெட்டுகளை எடுத்தனர். 10 விக்கெட்டில் 9 விக்கெட்டுகளை ஸ்பின் பவுலர்கள்தான் எடுத்தனர். பிட்ச் அது அளவிற்கு ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி இருந்தது.

பிட்ச்
இந்த நிலையில் இதே பிட்சை இங்கிலாந்து அணி பயன்படுத்தி உள்ளது. இந்த ஸ்பின் பிட்ச் தற்போது இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது. பிட்ச் அதிகம் ஸ்விங் ஆவதாலும், பிங்க் பால் என்பதாலும் பந்தை எதிர்கொள்வது கடினமாக மாறியுள்ளது.

திருப்பம்
பிட்ச் இப்படி டிரிக்காக இருப்பதால் அதை எதிர்கொள்ள முடியாமல் இந்திய வீரர்கள் திணறி வருகிறார்கள். ஜாக் லீச் என்ற ஒரே ஸ்பின் பவுலர் இருந்தால் இங்கிலாந்து அணி அவரையும் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். கோலி, ரோஹித் போன்ற முக்கிய வீரர்கள் லீச் ஓவரில்தான் அவுட் ஆனார்கள்.

பண்ட்
இன்னொரு பக்கம் பண்ட் இதேபோல் ரூட் ஓவரில்தான் அவுட் ஆனார். இந்தியா உருவாக்கிய பிட்ச் தற்போது இந்திய அணிக்கே எதிராக திரும்பி இருக்கிறது. குறைந்த பட்சம் 100-150 ரன்களாவது இங்கிலாந்தை விட முதல் இன்னிங்சில் அதிக எடுக்க இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது


Click it and Unblock the Notifications