மரண மாஸ் காட்டிய மதுரை பேந்தர்ஸ்... திணறிய நம்ம பயலுக…!! 125 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
திண்டுக்கல்: டிஎன்பிஎல் தொடரில் துவக்கத்தில் அதிரடியாக ஆடிய தூத்துக்குடி, எதிர்பாராத விதமாக மதுரை பேந்தர்ஸ் பவுலிங்கில் திணறி,124 ரன்களை எடுத்துள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 தொடர் ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்றைய 2வது ஆட்டத்தில் தூத்துக்குடி, மதுரை பாந்தர்ஸ் அணிகள் விளையாடின.

டாஸ் வென்று முதலில் தூத்துக்குடி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக, அக்ஷய் சீனிவாசனும், விக்டரும் களம் இறங்கினர். சீனிவாசன் தொடக்கம் முதலே அட்டகாசமாக ஆடினார். அவருக்கு உறுதுணையாக யாரும் ஆடவில்லை. சிவா மட்டும் 28 ரன்கள் எடுத்தார்.
34 ரன்களில் அரைசதம் எட்டினார் சீனிவாசன். விக்டர் 1 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 170 ரன்களை எட்டும் என்று எதிர்பார்த்த தூத்துக்குடி திணறியது.
ஒரு கட்டத்தில் 79 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று இருந்தது. ஆனால், அதன் பிறகு மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. முடிவில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது தூத்துக்குடி. 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதால் எளிய இலக்கை மதுரை பேந்தர்ஸ் ஜெயித்துவிடும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications