Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த கிரிக்கெட் வீரர் என்னை வீட்டிற்கு அழைத்தார்.. டிவி நடிகை காஷிஷ் கபூர் பகீர் பேட்டி!

மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் நேரடியாக சந்திப்பதற்கு தன்னை வீட்டிற்கு அழைத்தார் என்று பிரபல தொலைக்காட்சி நடிகை காஷிஷ் கபூர் கூறி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அந்த கிரிக்கெட் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது.

பாலிவுட் தொலைக்காட்சி நடிகை காஷிஷ் கபூர் பிரபலமான கிரிக்கெட் வீரர் குறித்து பேசி இருக்கும் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காஷிஷ் கபூர் பாலிவுட்டின் பல்வேறு தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாக வலம் வருபவர். பிக் பாஷ் 18வது சீசனில் வொய்ல்ட் கார்ட் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தவர்.

TV Actress Kashish Kapoor Claims

இதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இவரை பின்பற்றுவோர் எண்ணிக்கை மில்லியனை கடந்தது. இந்த நிலையில் காஷிஷ் கபூர் கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் இருந்து வந்த அழைப்பு குறித்து பேசி இருக்கிறார். அதில் காஷிஷ் கபூர் பேசுகையில், அவர் ஒரு பிரபலமான கிரிக்கெட் வீரர். அவரின் அழைப்பே கொஞ்சம் பயமாக இருந்தது. நேரடியாக என்னிடம் ஒரு அட்வான்ஸ் கொடுத்து நேரில் வந்து சந்திக்குமாறு கூறினார்.

ஆனால் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டேன். நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தாலும், என்னை ஈர்க்க வேண்டும். நான் நேரில் வந்து சந்திக்கும் அளவிற்கு என்னையும் ஈர்ப்பு கொள்ள வேண்டும். நீங்கள் கிரிக்கெட் வீரர்கள் என்பதால், உங்களின் தொழிலை பார்த்து ஈர்ப்பு வந்துவிடாது. அந்த கிரிக்கெட் வீரரின் சிந்தனை அப்படியானதாகவே இருந்தது.

அதனால் கிரிக்கெட் வீரரின் அழைப்பை நிராகரித்தேன். அவரின் அழைப்பே எனக்கு பிடிக்கவில்லை. உங்களின் தொழிலை மதிக்கிறேன். ஆனால் என்னுடன் நீங்கள் வந்து பேட்டிங்கோ அல்லது பவுலிங்கோ செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். காஷிஷ் கபூரின் பேச்சு யாரை குறிக்கிறது என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் இரண்டும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது. ஐபிஎல் தொடரில் 2 அணிகளை பாலிவுட் நட்சத்திரங்கள் வைத்துள்ளனர். மும்பையின் இரவு நேர பார்ட்டிகளில் சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து பங்கேற்பர். அதேபோல் விளம்பரங்களில் பாலிவுட் நடிகைகள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கூட்டணிக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் காஷிஷ் கபூருக்கு அழைப்பு விடுத்த கிரிக்கெட் வீரர் யார் என்ற விவாதம் நடந்து வருகிறது.

Story first published: Wednesday, August 13, 2025, 14:39 [IST]
Other articles published on Aug 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+