Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் வீரராக நடித்த தளபதி.. சச்சின் பெயரை மட்டுமல்ல.. ஹேர்ஸ்டைலையும் விட்டுவைக்காத விஜய்!

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் ஏராளமான படங்களில் விளையாட்டு வீரராகவும், கிரிக்கெட் ரசிகராகவும் நடித்திருக்கிறார். தற்போது அரசியல் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர். சிஎஸ்கே அணியின் விளம்பரத் தூதராகவும் விஜய் செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் சினிமாவில் விஜய்-க்கும் கிரிக்கெட்டுக்கும் உள்ள தொடர்பை பற்றி பார்க்கலாம்.

தற்போது வெளியாகியுள்ள GOAT திரைப்படத்தில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் தோனியின் Definitely Not வசனத்துடன் கூடிய ஜெர்சியை அணிந்து விஜய் தோன்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே போட்டியின் போது தான் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay TVK Tamilaga Vetri kalagam csk

அதேபோல் அந்த படத்தில் சிஎஸ்கேவின் டேக் லைனான விசில் போடு வார்த்தையை வைத்து ஒரு பாடலையும் தளபதி விஜய் பாடியுள்ளார். இதனால் சிஎஸ்கே ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். அதேபோல் பைரவா படத்தில் விஜய்-ன் முதல் காட்சியிலேயே கிரிக்கெட் விளையாடுவது போல் அமைக்கப்பட்டிருக்கும்.

vijay tvk tamilaga vetri kalagam csk

அதில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் என்று ஏராளமான கிரிக்கெட் வீரர்களின் போஸ்களை கொடுக்கும் விஜய், கடைசியாக தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டை விளையாடி இருப்பார். அதேபோல் வாரிசு படப்பிடிப்பின் போது சக நடிகர், நடிகைகளுடன் விஜய் கிரிக்கெட் விளையாடிய வீடியோவும் ட்ரெண்டாகியது.

Vijay TVK Tamilaga Vetri kalagam csk

அதேபோல் மாஸ்டர் படத்தின் போது ஒருமுறை ஷூட்டிங் ரத்து செய்யப்பட்ட போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் துணை இயக்குநர்களுடன் இணைந்து நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடியதாக கூறப்பட்டது. இதுமட்டுமல்லாமல் சச்சின் படத்தில் சிறு குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடி இருப்பார் விஜய்.

vijay tvk tamilaga vetri kalagam csk

அதேபோல் சச்சின் மீதான அன்பு காரணமாக படத்தின் தலைப்பும் சச்சின் என்று பெயரிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் வசீகரா படத்தில் சச்சினின் ஹேர்ஸ்டைலில் தான் விஜய் படம் முழுக்க நடித்திருப்பார். அதேபோல் மெர்சல், பத்ரி, போக்கிரி உள்ளிட்ட படங்களிலும் விஜய் கிரிக்கெட் விளையாடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

vijay tvk tamilaga vetri kalagam csk
Story first published: Thursday, August 22, 2024, 17:03 [IST]
Other articles published on Aug 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+