“கிங்” பீலேவைச் சந்தித்தார் ஹர்பஜன் சிங்!
சாவோ பாலோ: கால்பந்து ஜாம்பவானும், உலகெங்கும் கோடானு கோடி ரசிகர்களை இன்னும் தக்க வைத்திருப்பவரும், கிங் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவருமான முன்னாள் பிரேசில் சூப்பர் ஸ்டார் பீலேவை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரேசிலில் நடந்த கைக்கடிகார நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது பீலேவைச் சந்தித்துள்ளார் சிங்.
தீவிர கால்பந்து ரசிகரான ஹர்பஜன் தற்போது இந்திய அணியில் இடம் பெறவில்லை. மேலும் உலகக் கோப்பைப் போட்டிகளை டிவியில் பார்த்து வருகிறார்.
இந்த நிலையில்தான் பீலேவை சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

வாழ்நாள் அனுபவம்
பீலேவைச் சந்தித்தது குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் இது எனது வாழ்நாளில் கிடைக்காத அரிய அனுபவம்.

மாபெரும் மனிதர்
மிகப் பெரிய மனிதராக இருந்தாலும் கூட மிக எளிமையாக இருக்கிறார் பீலே. மிகப் பெருமையாக இருக்கிறது அவருடனான சந்திப்பு.

மகத்தான விளையாட்டு
கால்பந்து சாதாரண விளையாட்டுதான், ஆனால் மகத்தானது. அதில் பீலே போன்றவர்கள் மிகப் பெரிய ஜாம்பவான்கள். அதேசமயம், கால்பந்துப் போட்டியைப் போலவே பீலேவும் எளிமையாக இருக்கிறார் என்று கூறியுள்ளார் ஹர்பஜன்.

செப்டம்பரில் இந்தியா வந்த பீலே
பீலே, கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா வந்துள்ளார். அவருக்கும் கிரிக்கெட் குறித்துத் தெரிந்திருக்கிறது. இதுகுறித்து ஹர்பஜன் கூறுகையில் பீலேவுக்கு கிரிக்கெட்டும் தெரிந்திருக்கிறது. இந்தியாவில் அது பிரபலமான விளையாட்டு என்பதையும் அறிந்து வைத்திருக்கிரார்.

கால்பந்து விளையாடத் தெரியுமா…
என்னிடம் அவர் நீங்கள் கால்பந்து விளையாடுவீர்களா என்று கேட்டார். நான் கிரிக்கெட் போட்டிகளின்போது வார்ம் அப் போட்டியாக விளையாடுவோம் என்றேன். அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்றார் ஹர்பஜன் சிங்.


Click it and Unblock the Notifications