
எமோஜி
பொதுவாக டிவிட்டர் நிறுவனம் நாம் ஒரு ஹேஷ்டேக்கை போட்டால், அதற்கு ஏற்றார் போல் ஒரு எமோஜியை (பொம்மை உருவம்) வழங்கும். ஒலிம்பிக், கால்பந்து, கிரிக்கெட் கோப்பை போன்ற தொடர்கள் நடந்தால் அதை குறிக்கும் வகையில் டிவிட்டரே ஒரு எமோஜியை வழங்கும்.திரைப்பட பெயர்களுக்கு கூட இது போன்ற எமோஜியை டிவிட்டர் நிறுவனத்திடம் பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம்.
G.O.A.T actorvijay ...no doubt on that !!! 👑🌈🤩
— Girish Johar (girishjohar) February 23, 2022
💫💫💫💫💫💫💫💫💫#Vijay𓃵#ThalapathyVijay𓃵
💫💫💫💫💫💫💫💫💫#Beast #ThalapathyVijay
👏🏻💖👏🏻💖👏🏻💖👏🏻💖👏🏻💖 pic.twitter.com/BNV514KZYA
கௌரவம்
தமிழ் சினிமாவில் முதன் முதலாக மெர்சல் திரைப்படத்திற்கு தான் இது போன்ற எமோஜி வழங்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களுக்கும் அந்த எமோஜியை வழங்கினர். இந்த நிலையில், விளையாட்டு வீரர்களுக்கு டிவிட்டர் நிறுவனமே ஒரு கௌரவத்தை வழங்கியுள்ளது.
#ViratKohli𓃵. Enough said. #PlayBold #WeAreChallengers pic.twitter.com/UMN4WiNOCg
— Royal Challengers Bangalore (RCBTweets) February 23, 2022
GOAT
அதாவது GOAT என்றால் ஆடு என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதற்கு இன்னொரு அர்த்தமும் உள்ளது. GREATEST OF ALL TIME அதாவது, அனைத்து காலத்திலும் சிறந்த நபர் என்ற பொருள். இதனை குறிக்கும் விதமாக ஆட்டு தலை தோற்றம் கூடிய எமோஜியை டிவிட்டர் நிறுவனம் வழங்கியுள்ளது.
A boy that conquered everything & turned a legend now. Bow down to one & only G.O.A.T of Indian cinema in modern era #Prabhas𓃵 pic.twitter.com/ZY5ad9dGf6
— M Adithya Reddy (adithyaVmoviies) February 23, 2022
யாருக்கு எல்லாம் எமோஜி?
தற்போது இந்த எமோஜியை விராட் கோலி, ரோகித் சர்மா, தோனி, நடால் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று திரைப்பட நடிகர்கள் விஜய், அஜித், பவன் கல்யாண், அல்லு அர்ஜூன், பிரபாஸ் ஆகியோருக்கும் டிவிட்டர் மோஜி வழங்கப்பட்டுள்ளது. இதனால் குஷியில் இருக்கும் ரசிகர்கள், அவர்களது நாயகர்கள் பெயர்களை டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications