Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெளியேற்றப்பட்ட இந்தியா.. டிவிட்டரில் குவிந்த ஆறுதல்களும், தேறுதல்களும்!

சிட்னி: உலகக் கோப்பைத் தொடரிலிருந்து நடப்புச் சாம்பியன் இந்தியா வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து டிவிட்டரில் மக்களும், கிரிக்கெட் பிரபலங்களும், பல்துறையினரும் கருத்துக்களைக் குவித்து விட்டனர்.

வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்ததைப் போல, அரை இறுதி வரை வந்த நடப்புச் சாம்பியன் இந்தியாவுக்கும் பாராட்டுகளும், ஆறுதல்களும் குவிந்திருந்தன.

சிறப்பாக விளையாடிய இந்தியா, அருமையான போட்டியைக் கொடுத்ததாகவும், ஆனால், துரதிரஷ்டவசமாக ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டதாக முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷான் வார்ன் புகழாரம் சூட்டியிருந்தார்.

வார்ன் கருத்து

ஷான் வார்ன் வெளியிட்ட ஒரு டிவிட்டில், ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். மிகச் சிறப்பாக விளையாடினீர்கள். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா, நி்யூசிலாந்து. அருமையான போட்டியாக அமையும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவுக்குப் பாராட்டு

வார்ன் வெளியிட்ட இன்னொரு டிவிட்டில், வெல்டன் இந்தியா. மிகச் சிறப்பான உலகக் கோப்பையாக இது அமைந்தது. துரதிர்ஷ்டவசமாக டோணி மற்றும் குழுவினரை ஆஸ்திரேலியர்கள் தோற்கடித்து விட்டார்கள் என்று கூறியுள்ளார்.

சுஷ்மிதா சென்

நடிகை சுஷ்மிதா சென் வெளியிட்ட டிவிட்டில், இது இந்தியர்களுக்கு நிச்சயம் இதயத்தை வருத்தம் செய்திதான். ஆனால் இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா மிகச் சிறப்பாக விளையாடியது. டோணி மற்றும் குழுவினருக்குப் பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.

ஆஸி.க்கு சங்கக்கரா பாராட்டு

இலங்கை முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கரா வெளியிட்ட டிவிட்டில், ஆஸ்திரேலியா மிகவும் வலிமையான அணி என்பதைக் காட்டி விட்டது. ஸ்வீட் ஸ்மித் மிகச் சிறப்பாக ஆடி விட்டார். விராத் கோஹ்லி சரியாக ஆடாதது பின்னடைவு. மிகச் சிறப்பான இறுதிப் போட்டி கண்டிப்பாக உண்டு என்று கூறியுள்ளார்.

Story first published: Friday, March 27, 2015, 8:02 [IST]
Other articles published on Mar 27, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+