Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கூட்டத்துல பச்சை சட்டக்காரன் இருக்கானாப்பா.. கலந்து கட்டி "அடிக்கும்" ரசிகர்கள்!

சென்னை: இந்த புளு சட்டைக்காரங்க ஒரு முடிவோடதான் இருக்காங்க போல பச்சை சட்டை போட்டவங்களை இப்படி வெரட்டி வெரைட்டி அடிக்கிறாங்களே என்று பாகிஸ்தான், தென்ஆப்ரிக்கா, அயர்லாந்து நாட்டினர் அங்கலாய்ப்பு படுகின்றனர்.

வேணாம் விட்டுடு... அப்புறம் நான் அழுதுடுவேன்... என்று வடிவேலு பாணியில் கெஞ்சினாலும் நம் ஆட்கள் விடுவதாக இல்லை.

எப்படி பந்து போட்டாலும் அடிப்போம் என்று பேட்ஸ்மேன்கள் சொல்லிவந்த நிலையில் லட்டு லட்டா விக்கெட் எடுப்போம் என்று பவுலர்களும் தங்களின் பங்குக்கு சூறாவளியாய் சுற்றிச் சுழல்கின்றனர்.

முறுக்கு மீசை தவான்

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் அமோக ஆதரவை ட்விட்டரில் உடனுக்குடன் பதிவு செய்து வருகின்றனர். உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் முன்னர் மடங்கியிருந்த தவானின் மீசை போட்டிகளில் அவர் அடித்து ஆடும் ஆட்டத்தால் முறுக்கு மீசையாகிவிட்டதாக கார்ட்டூன் வரைந்துள்ளார் ஒரு ரசிகர்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

உலகக் கோப்பை போட்டிகளின் லீக் ஆட்டங்கள் முடிந்து நாக் அவுட் ஆட்டங்கள் விரைவில் துவங்க உள்ளன நிலையில், இந்திய அணி ரசிகர்கள் தங்களது ஆதரவை சமூக வலைத்தலங்களிலும், இணையதளங்களிலும் தெரிவித்து வருகின்றனர்.

தோல்வியடையாத அணி

தோல்வியடையாத அணி

தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளிலும் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது மட்டுமின்றி, தோல்வியை சந்திக்காமல் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம், இந்திய அணி ஆடும் போட்டிகளுக்கு சிறப்பு விளம்பரங்களை தயார் செய்து ரசிகர்களை கவர்ந்தது. அதில் மோக்கா! மோக்கா! விளம்பரம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

கலக்கும் மீம்ஸ்

கலக்கும் மீம்ஸ்

இதனை தொடர்ந்து அது குறித்த மீம்களும், சமூக வலைதளங்களில் வெளியாகின. தற்போது பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளை புரட்டியெடுத்த இந்தியாவை, 'பச்சை நிற சீருடை அணிந்தால் இந்தியா தோற்கடிக்கும்' என்ற மீம்ஸ்களை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

பச்சை சட்டை போட்டா

பச்சை சட்டை போட்டா

இதனைத் தொடர்ந்து காலிறுதியில் பங்களாதேஷ் பச்சை வண்ண சீருடை அணி என்றும், அரையிறுதியில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வென்றால் மீண்டும் அரையிறுதியில் பச்சை வண்ண சீருடை அணியை தோற்கடிக்கும் என்றும் கூறிவருகின்றனர்.

அங்கேயும் அடிப்போம்

அங்கேயும் அடிப்போம்

இறுதிப்போட்டிக்கு ஒருவேளை இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா முன்னேறும் போது அங்கும் பச்சை வண்ண சீருடை ராசி கைகொடுக்கும் என்று கணிப்புகளை வைரலாக்கியுள்ளனர் ரசிகர்கள்.

ட்ரெண்டும் வைரலும்

ட்ரெண்டும் வைரலும்

இவையெல்லாம் வெறும் கணிப்பு என்றாலும், இந்திய அணிக்கு அது போன்ற ஒரு வாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளது உண்மையே என்பதால் ரசிகர்களின், 'பச்சை சட்டைனா அடிப்போம்' மீம்ஸ்கள் வைரலாகியுள்ளன.

Story first published: Wednesday, March 11, 2015, 16:09 [IST]
Other articles published on Mar 11, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+