For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அப்படி அடி சபாசு... "சின்னச்சாமி"யைக் கலக்கிய சர்பராஸ்!

பெங்களூரு: வயசு சிறிசா இருந்தாலும் அடித்த அடியைப் பார்த்தால் இந்தியாவுக்கு இதோ ஒரு புதிய பேட்டிங் ஸ்டார் வந்து விட்டதை உணர்த்தியது இளம் வீரர் சர்பராஸ் கான் ஆடிய விதம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சர்பராஸ் கான் நேற்று தனது பேட்டிங் திறமை மூலம் அத்தனை பேருடைய கவனத்தையும் சுண்டி இழுத்து விட்டார். இவருக்கு வயது 17தான். ஆனால் முதிர்ச்சி அடைந்த வீரர் போல இவர் ஆடிய விதம் அனைவரையும் குஷியில் ஆழ்த்தி விட்டது.

அதிலும் அவர் சிக்ஸரை அனாயசமாக பறக்க விட்ட விதம் ரசிகர்களை பரவசப்படுத்தி விட்டது. இவர் இந்திய அணியின் அசைக்க முடியாத ஸ்டாராக மாறப் போகிறார் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் புகழாரம் சூட்டுகின்றனர்.

இளம் வீரர்

இளம் வீரர்

நடப்பு ஐபிஎல் தொடரில் மிகவும் இளம் வயது வீரர் என்ற பெருமைக்குரியவர் சர்பராஸ் கான். நேற்று தனது முழுத் திறமையையும் காட்டி பெங்களூர் அணி பெரிய ஸ்கோரை எட்ட உதவினார்.

அஞ்சான் ஆட்டம்

அஞ்சான் ஆட்டம்

ராஜஸ்தானின் ஆக்ரோஷமான பந்து வீச்சைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் அடித்து நொறுக்கி ஆடினார் சர்பராஸ் கான். அவரது ஆட்டம் அத்தனை பேரின் பாராட்டுகளையும் பெற்றது.

கும்பிடு போட்டு வரவேற்ற கோஹ்லி

கும்பிடு போட்டு வரவேற்ற கோஹ்லி

அட்டகாசமாக ஆடி முடித்து ஆட்டமிழக்காமல் பெவிலியன் திரும்பிய சர்பராஸ் கானுக்கு, கேப்டன் கோஹ்லி, கையெடுத்து கும்பிடு போட்டு குணிந்து வணக்கம் சொல்லி வரவேற்றது காணக் கண் கொள்ளாததாக இருந்தது.

பந்து 21.. ரன்னோ 45

பந்து 21.. ரன்னோ 45

21 பந்துகளைச் சந்தித்த சர்பராஸ் கான் 45 ரன்களைக் குவித்தார். அதில் ஒரு இமாலய சிக்ஸரும், 6 பவுண்டரிகளும் அடக்கமாகும். ஐபிஎல்லில் ஆடுவது சர்பராஸுக்கு இதுவே முதல் முறையாகும்.

வெறும் 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டவர்

வெறும் 50 லட்சத்துக்கு வாங்கப்பட்டவர்

இவரை வெறும் 50 லட்சத்துக்குத்தான் பெங்களூர் அணி வாங்கியது. ஆனால் ரூ. 16 கோடிக்கு வாங்கப்பட்ட டெல்லி வீரர் யுவராஜ் சிங்கை விட அற்புதமாக ஆடி விட்டார் சர்பராஸ் கான்.

சென்னைக்கு எதிராக முதல் போட்டி

சென்னைக்கு எதிராக முதல் போட்டி

ஏப்ரல் 22ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரில் நடந்த போட்டியில்தான் முதலில் அறிமுகமானார் சர்பராஸ் கான். அதில் அவர் 11 ரன்Kள் மட்டுமே எடுத்தார். ஆனால் நேற்று வேறு மாதிரியான ஆட்டத்தை அவர் காண்பித்தார்.

அப்படியே மியான்தத் மாதிரி

அப்படியே மியான்தத் மாதிரி

நேற்றைய போட்டியின்போது வர்ணனை செய்து கொண்டிருந்த ரவி சாஸ்திரி கூறுகையில், இவரைப் பார்த்தால் அப்படியே ஜாவேத் மியான்தத்தைதப் பார்ப்பது போலவே இருக்கிறது என்றார்.

அரவிந்த டிசில்வா மாதிரி

அரவிந்த டிசில்வா மாதிரி

இன்னொரு வர்ணனையாளரான ஆஸ்திரேலியாவின் மெலனி ஜோன்ஸ் கூறுகையில், இலங்கையின் அரவிந்த டிசில்வா போலவே ஆடுகிறார் சர்பராஸ் கான் என்று பாராட்டினார்.

மும்பைவாலா

மும்பைவாலா

சர்பராஸ் கான் மும்பையைச் சேர்ந்தவர். மும்பையிலிருந்து வந்த சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகை கட்டி ஆண்டது போல இந்த சர்பிராஸும் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் சர்பராஸ் கான் பேட்டிங் குறித்து முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் புகழாரம் சூட்டி போஸ்ட் போட்டுள்ளனர்.

Story first published: Thursday, April 30, 2015, 11:07 [IST]
Other articles published on Apr 30, 2015
English summary
Former cricketers have hailed 'Javed Miandad' Sarfaraz Khan of RCB after watching his fearless batting against RR.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+