Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஊக்க மருந்தும், இந்திய அணியினர் தூக்க மருந்தும் சாப்பிட்டனரா?

மும்பை: இந்தியா-தென் ஆப்பிரிக்கா நடுவேயான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமாக தோற்றது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்று, முதல் முறையாக இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை வென்ற சாதனையையும் படைத்தது. ஏற்கனவே டி20 போட்டி தொடரையும் இந்தியா இழந்துள்ளதால், கேப்டன் டோணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தென் ஆப்பிரிக்கா 438 ரன்கள் வாரிக்குவிக்க வழி செய்த இந்திய பவுலர்களின் திறமையும் கடும் கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் தமிழ் ரசிகர்களில் சிலர் டோணியை சப்போர்ட் செய்கிறார்கள். சிலர் வெறுக்கிறார்கள். கவலையை மறக்க காமெடியாக இந்த தோல்வியை வர்ணிப்போரும் உண்டு.

அதுபோன்ற தமிழ் டிவிட்டர் கீச்சுகள் சிலவற்றை இப்போது பாருங்கள். தோற்ற சோகத்தை மறவுங்கள்.

இது எப்படி?

நாங்க 440 அடிக்காதது கேவலம் இல்லடா.. அவ்ளோ அடிப்போம்னு நினைச்சு மாங்கு மாங்குன்னு ரன் எடுத்தீங்களே அதான்டா கேவலம்.. என்றுகூறி, சுய கேலி செய்கிறது இந்த டிவிட். வடிவேலு ஒருபடத்தில், அடிவாங்கியது நான், கப் எனக்குத்தான் என்பாரே, அதுபோன்ற கேலி இது.

பேக்டு, பேக்டு

சவுத் ஆப்பிரிக்காகாரனுங்க ஊக்க மருந்து சாப்பிட்டு விளையாடுறானுங்களா.. இல்ல இந்தியாகாரனுங்க தூக்க மருந்து சாப்பிட்டு விளையாடுறானுங்களா?, என்று கேட்கிறது இந்த டிவிட். இரண்டுமே உண்மை என்பதுபோலத்தான் ஆட்டம் இருந்தது என்பதைத்தான் இந்த கீச்சர் இப்படி கேலி செய்கிறார்.

அதானே

"இதுவே ஆஸி, நம்மள அடிச்சிருந்தா எவ்ளோ டென்ஷனாயிருப்போம்? இப்போ கூலாயிருக்கோமே ஏன் தெரியுமா? எப்டி பார்த்தாலும் டிவில்லியர்ஸ் நம்ம பய" என்கிறது இந்த டிவிட். ஆஸ்திரேலியா மட்டுமல்ல வெஸ்ட் இண்டீசிடம் தோற்றிருந்தால் கூட இந்திய ரசிகர்கள் கொந்தளித்திருப்பார்கள். ஆனால் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆட்டத்துக்கு இந்தியாவில் கணிசமாக ரசிகர்கள் உள்ளனர் என்பது இதில் கவனிக்க வேண்டியது.

இப்படியும் இருக்குமோ..

இந்திய அணிக்கு இருந்த ஒரே ஆயுதம் இந்திய ஆடுகளங்கள் தான்! அதையும் IPL மூலமாக வெளிநாட்டு வீரர்களுக்கு பயிற்சிகுடுத்து வசதி ஆக்கிட்டாங்க! என்கிறது இந்த டிவிட். உண்மைதான். முன்பெல்லாம், இந்திய பிட்சில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை தவிர்த்த எந்த நாட்டு அணியுமே ஸ்பின்னை எதிர்கொள்ள மிகவும் திணறும். அதிலும் தென் ஆப்பிரிக்கா மிகவும் வீக். இப்போது ஐபிஎல் புண்ணியத்தில் வெளிநாட்டு வீரர்கள் நம்மூரில் சிறப்பாக ஆட ஆரம்பித்துவிட்டனர்.

டோணிக்கு சப்போர்ட்

இன்று தோனியை கழுவி ஊத்தும் நல்லுள்ளங்கள், பிற்கால மேட்சுகளில், ப்ச்,தோனி மட்டும் இப்போ இருந்திருந்தா எனக்கூறும் நேரம் வருமென கூறிக்கொண்டு.. என்று முடிகிறது இந்த டிவிட். டோணி இருக்கும்போது அருமை தெரியாது என்பது இவரது வாதம்.

இப்படி பண்றீங்களேம்மா

இந்தியா தோர்த்திருச்சா?? சிம்புவையே தோற்கடிச்ச நாடு சார் இது.. என்று கூறும் இந்த கீச்சர், இந்திரா காந்தி இறந்துவிட்டாரா என்று கூறி அதிர்ச்சியடையும் சினிமா காட்சி போல, கேலி செய்துள்ளார். மேலும், நடிகர் சங்கத்தில் சிலம்பரசனை தோற்றதையும், இதில் இணைத்து குசும்பு காட்டியுள்ளார்.

டோணி அவ்ளோதானா

ரஹானே அவுட்டானதுமே மேட்ச் முடிந்துவிட்டது என்ற எண்ணமே தோனியின் அவசியமின்மையை உணர்த்துகிறது.. என்கிறது இந்த டிவிட். ரஹானே அருமையாக ஆடியபோது இந்தியா வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நினைத்ததையும் அவர் அவுட் ஆன பிறகு டோணி இருந்தபோதும், இந்தியா தோற்றுவிடும் என்று பெரும்பாலான ரசிகர்கள் நினைத்ததையும் இவ்வாறு ஒப்பிட்டுள்ளார்.

வேற யாரு

டோனி வேலைக்காக மாட்டான் சரி ரைட்டு வேற ஒரு நல்ல கேப்டன சொல்லுன்னா "கோலி"ம்பானுங்க பாரு..அப்டியே கொமட்டுலயே குத்தி விட்ரனும்.. டோணிக்கு மாற்றாக நல்ல கேப்டன் இன்னும் உருவாகவில்லை என்கிறது இந்த டிவிட்.

வாராது வந்த மாமணி

என்னமோ போங்கப்பா இனி தோனி மாதிரி ஒரு கேப்டன் வேணும்னா இன்னும் 50 வருஷம் காத்திருக்கணும்.. என்கிறது இந்த டிவிட். கடந்த காலங்களில் நல்ல கேப்டன் இன்றி இந்தியா திணறியது. டோணி பல கோப்பைகளை வென்று கொடுத்தார். ஆனால் இப்போது அவரும் நொடிந்துபோயுள்ள நிலையில், அடுத்த கேப்டனுக்கு 50 வருடம் காத்திருக்க வேண்டும் என்கிறது இந்த டிவிட்.

டோணி மட்டுமே காரணமா?

சீரிஸ் தோத்ததுக்கு தோணி காரணமில்லைனு நாங்க சொல்லல. தோணி மட்டுமே காரணம்னு நீங்க சொல்லாதீங்கன்னு தான் சொல்றோம்... என்று டோணிக்கு ஆதரவாக கமல் பட டயலாக் பாணியில் உசுப்பேற்றுகிறது இந்த டிவிட்.

இல்லைன்னா ஜெயிச்சிருப்பீங்களா

இந்தியா தோற்பதற்க்கு தோனியே காரணம். தோனி இல்லாமல் இருந்துருந்தால் கிழிச்சு கேப்பைய நட்டிறுவானுக.. என்று சீற்றம் கொள்கிறார் இந்த கீச்சர். டோணி இல்லாமல் இருந்திருந்தாலும், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருக்க முடியாது என்பது இவரது பார்வை.

நாங்கள்ளாம் அப்போவே அப்படி

இந்த கப்ப நீங்க வாங்கலாம்டா. எங்ககிட்ட 50 ஓவர் வேர்ல்டுகப் இருக்கு 20-20 வேர்ல்டுகப் இருக்கு உங்ககிட்ட இருக்காடா.. என்று இந்திய அணியினர், தென் ஆப்பிரிக்காவை பார்த்து கேட்கலாமே என்று ஐடியா கொடுக்கிறார் இந்த கீச்சர். வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில், ஒரு பழைய பைக்கை வைத்துக்கொண்டு, தனுஷ் கேரக்டர், அந்த பைக்கின் அருமை, பெருமையை விளக்கும் படத்தையும் இதற்கு உதாரணமாக காட்டி, சுய எள்ளல் செய்துள்ளார் இவர்.

டோணி ஹேட்டர்ஸ்

ரோஹித், கோலி, ரெய்னான்னு ஒரு பயலும் புடுங்கல, ஆனா தோனி ரன்னடிக்காட்டி அரைடவுசரை அரைஞான் கயிறுல மாட்டிக்கிட்டு தோனிய திட்டுவானுங்க :-/ என்று கூறுகிறது இந்த டிவிட். பிற வீரர்கள் செய்த தப்புக்கு டோணியை குறை கூறக்கூடாது என்று இந்த கீச்சர் கம்பு சுத்துகிறார்.

Story first published: Monday, October 26, 2015, 12:23 [IST]
Other articles published on Oct 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+