Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சண்டையில் கிழியாத சட்டையா.. வாட்சன்- வஹாப் மோதல் குறித்து டிவிட்டரில் கசமுசா!

அடிலைட்: இதுவரை இல்லாத அருமையான வேகப் பந்து வீச்சை இன்று அடிலைட் மைதானத்தில் ரசிகர்கள் கண்டு களித்தனர். ஆஸ்திரேலியா மிரட்டியது என்றால் பாகிஸ்தானும் பதிலுக்கு அசத்தியது... வாட்சன், வஹாப் மோதலுடன்.

ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் ஷான் வாட்சனுக்கும், பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் இன்றைய போட்டியின் சுவாரஸ்யமான ஹைலைட்.

இருவருக்கும் இடையே வெடித்த வார்த்தை மற்றும் பாடி லாங்குவேஜ் போரால் ஏற்கனவே பறந்த அனல் மேலும் கூடி தகித்தெடுத்து விட்டது. இருப்பினும் கடைசியில் வென்றது என்னவோ கிரிக்கெட்தான்.

முறைப்பு, கோபம், ஆவேசம், கேலி, கிண்டல் என இருவரும் மாறி மாறி உராய்ந்து கொண்டது குறித்து டிவிட்டரிலும் பலர் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இம்பரசிவ் பவுலிங்

மாவிஷ் ராஜ்புத் என்பவர் சண்டையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தொகுத்து கம் ஆன் வஹாப்.. இம்ப்ரசிவ் பவுலிங் என்று பாராட்டியுள்ளார்.

கெவின் பீட்டர்சன்

முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் தனது டிவிட்டரில், ஆஸி மண்ணில் நீண்ட காலத்திற்குப் பிறகு மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சைப் பார்க்கிறேன் என்று வஹாப்பைப் பாராட்டியுள்ளார்.

கிளாரிட்டி 21

கிளாரிட்டி 21 என்பவர் வஹாப் ரியாஸின் மாபெரும் பந்து வீச்சு என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஓமர் குரேஷி

ஓமர் ஆர் குரேஷி என்பவர் கொடுத்துள்ள டிவிட்டில், உலகக் கோப்பையில் வஹாப்பின் மிகச் சிறந்த பந்து வீச்சு இதுதான் என்று பாராட்டியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா

நம்ம ஊர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்டுள்ள டிவிட்டில், டாப் ஸ்பெல் என்று வஹாப்பைப் பாராட்டியுள்ளார்.

Story first published: Friday, March 20, 2015, 18:14 [IST]
Other articles published on Mar 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+