Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படியா டொக்கு வைப்பீங்க.. இது உங்களுக்கே நியாயமாரே புஜாரா? - வீடியோ

ஜோஹன்ஸ்பர்க்: இந்தியா தென்னாப்பிரிக்கா மோதும் 3வது டெஸ்ட் போட்டி ஜோஹன்ஸ்பர்க்கில் நடக்கிறது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

இதில் முதலில் பேட்டிங் இந்தியா சொதப்பியது. வீரர்கள் அனைவரும் வரிசையாக அவுட் ஆனார்கள். கோஹ்லி அதிகமாக 54 ரன்னும், புஜாரா 50 ரன்னும் எடுத்தார்கள்.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா அனைத்து விக்கெட்டையும் இழந்து 187 ரன்கள் மட்டும் எடுத்தது. இதில் புஜாரா ராகுல் டிராவிட்டிற்கு சவால் விடும் அளவிற்கு ஆடியிருக்கிறார்.

முதல் ரன் அடித்த புஜாரா

முதல் ரன் அடித்த புஜாரா

இந்த போட்டியில் 179 பந்துகள் பிடித்த புஜாரா 50 ரன்கள் அடித்தார். இதில் அவர் முதல் ரன் அடிக்க மட்டும் 54 பந்துகள் எடுத்துக் கொண்டார். எந்த பந்து போட்டாலும் டொக் வைத்து தென்னாபிரிக்க பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றினார்.

வைரல்

இவரது இந்த பேட்டிங் டிவிட்டரில் வைரல் ஆகி இருக்கிறது. இதுகுறித்து பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ''புஜாரா பந்துகளை விடுவது எப்படி என்று கற்றுக் கொண்டு இருக்கிறார்'' என்று காமெடியாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வளவு நேரம்

இவர் புஜாரா பேட்டிங் பிடிக்க வந்த போது இருந்த பெண்ணின் வயதிற்கும், அவர் முதல் ரன் எடுத்த போது இருந்த அந்த பெண்ணின் வயதிற்கு உள்ள வித்தியாசம் என்று காமெடியாக போட்டுள்ளார். அவ்வளவே நேரம் அவர் எடுத்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

இதுதான் கிரிக்கெட்

இவர் புஜாரா ஆடியதை சிறந்த கிரிக்கெட் என்று கூறியுள்ளார். மேலும் தென்னாபிரிக்கா பவுலர்கள் கோவப்பட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

எவ்வளவு நேரம்

இவர் ''புஜாரா பேட்டிங் பிடிக்க வந்து அவர் முதல் ரன் எடுக்கும் போது நமக்கு வயது ஆகிவிடும்'' என்று கூறியுள்ளார்.

பொறுமை

இவர் புஜாரா போல பொறுமை எனக்கு வாழ்க்கையில் வேண்டும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Story first published: Thursday, January 25, 2018, 17:09 [IST]
Other articles published on Jan 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+