Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணிக்கு நாங்க இருக்கோம்: யோக்ராஜை ட்விட்டரில் வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

சென்னை: கேப்டன் டோணி ஒரு நாள் பணம் இல்லாமல் பிச்சை எடுப்பார் என்று கூறிய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்கை ரசிகர்கள் ட்விட்டரில் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யுவராஜ் சிங்கின் பெயர் இல்லை என்பதை தெரிந்தவுடன் அவரது தந்தை யோக்ராஜ் சிங் கேப்டன் டோணியை குறை கூறி பேட்டி அளித்தார். இந்நிலையில் உலகக் கோப்பை போட்டி முடிந்த பிறகு மீண்டும் டோணியை தாக்கிப் பேசியுள்ளார். டோணி ராவணன் போன்றவர். ஒரு நாள் அவர் பைசா இல்லாமல் பிச்சை எடுப்பார் என்று யோக்ராஜ் தெரிவித்துள்ளார்.

யோக்ராஜை கண்டித்து ரசிகர்கள் ட்விட்டரில் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். அத்தகைய ட்வீட்களில் சில,

யுவராஜ்

யுவராஜ் சிங்கின் தந்தை அவரது சர்வதேச கெரியரை கெடுக்க முயற்சிக்கிறார். யுவராஜுக்காக பாவப்படுகிறேன் #Yograj என ஜக்மீத் என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கை

யோக்ராஜ் சிங்: டோணி தன்னை ராவணனுக்கு மேலாக நினைக்கிறார்.

ஆமாம் அங்கிள்ஜி, இலங்கைக்கு எதிரான அவரது சாதனைகளை பாருங்கள் என்று க்ரிக்பிசி ட்வீட் செய்துள்ளது.

ஐஐஎன்

யோக்ராஜ் சிங்: டோணி ஒரு நாள் பைசா இல்லாமல் பிச்சை எடுக்கப் போகிறார்.

எம்.எஸ். டோணி: சர் நீங்கள் எந்த ஐஐஎன்? என சிட்டு என்பவர் தெரிவித்துள்ளார்.

இஷாந்த்

இஷாந்த்: டோணி சொன்னால் நான் 24வது மாடியில் இருந்து குதிப்பேன்.

யோக்ராஜ்: சொன்னேன்ல! நம் வேகப்பந்து வீச்சாளர்களை கூட டோணி தற்கொலை செய்ய நினைக்க வைக்கிறார் என க்ர்கிபிசி தெரிவித்துள்ளது.

டோணி

டோணியிடம் பைசா இல்லாமல் போனால் கூட அவர் தனது வீட்டில் உள்ள ஸ்டம்புகளை விற்றால் மீண்டும் கோடீஸ்வரர் ஆகிவிடுவார் என்கிறார் ஆகாஷ்.

Story first published: Wednesday, April 8, 2015, 16:30 [IST]
Other articles published on Apr 8, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+