Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையில் 15 ஆண்டுகளாக தொடரும் சாபம்..முடிவுக்கு கொண்டு வருமா ஆஸி? இந்தியாவுக்கு பலன் தருமா

மெல்போர்ன்: டி20 உலககோப்பையில் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு சாபம் தொடர்ந்து வருகிறது. இந்த சாபம், தற்போதும் தொடர்ந்தால், அது இந்தியாவுக்கு பலன் தரும்.

எனினும் இந்த சாபத்தை ஆஸ்திரேலியா முடிவுக்கு கொண்ட வரும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அது என்ன சாபம், அது தொடர்ந்தால் இந்தியாவுக்கு எப்படி பலன் கிடைக்கும் என்பதை தற்போது காணலாம்.

2007 ஆம் ஆண்டு

2007 ஆம் ஆண்டு

டி20 உலககோப்பை தொடங்கி இன்று வரை, எந்த நாடு போட்டியை நடத்துகிறதோ, அந்த நாடு கோப்பையை வென்றது இல்லை. 2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நடத்தியது. அப்போது அந்த அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் டி20 உலககோப்பை நடந்த போது அந்த அணியால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் தவறியது

வெஸ்ட் இண்டீஸ் தவறியது

2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற போது, பலமான அணியாக வெஸ்ட் இண்டீஸ் விளங்கியும், அவர்களால் இறுதிப் போட்டிக்கு கூட செல்ல முடியவில்லை. 2012ஆம் ஆண்ட இலங்கையில் நடைபெற்ற போது இலங்கை இறுதிப் போட்டி வரை சென்று தோல்வியை தழுவியது. 2014ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்றது, அதைப் பற்றி பேசவே தேவையில்லை.

இந்தியாவையும் தாக்கியது

இந்தியாவையும் தாக்கியது

2016ஆம் ஆண்டு இந்தியாவில் டி20 உலககோப்பை நடைபெற்ற போது, இந்தியா பலமான அணியாக விளங்கியது. எனினும், இந்தியா அரையிறுதி சுற்றிலேயே வெளியேறியது. 2020ஆம் ஆண்ட யுஏஇயில் நடைபெற்றது, அது குறித்தும் பேசத் தேவையில்லை. தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த தொடரில் அஸ்திரேலியா வெல்லுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

முறியடிக்குமா ஆஸி

முறியடிக்குமா ஆஸி

இதே போன்று ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி, அடுத்த முறை அந்த பட்டத்தை தக்க வைத்து கொண்டதும் இல்லை. இதனால், தற்போது ஆஸ்திரேலியாவை சுற்றி 2 சாபங்கள் நிற்கிறது. இதனை ஆஸ்திரேலியா உடைக்குமா? இல்லை அந்த சாபங்கள் தொடர்ந்தால் இந்தியா உள்ளிட்ட அணிகள் பலன் பெறுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Story first published: Tuesday, October 18, 2022, 11:46 [IST]
Other articles published on Oct 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+