2 நாள் டைம்.. இந்திய வீரரிடம் கறாராக சொன்ன பிசிசிஐ.. 4வது டெஸ்டில் முக்கிய வீரர் ஆடுவதில் சிக்கல்!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் ஆடுவாரா, மாட்டாரா என்பது குறித்து நாளை மாலைக்குள் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விஹாரி, ஜடேஜா இருவரும் காயம் அடைந்தனர். அதிலும் விஹாரி தொடையில் உட்பகை தசை கிழிந்த நிலையில் விளையாடி இருக்கிறார்.
மிகப்பெரிய வலியை பொறுத்துக்கொண்டு இவர் களத்தில் ஆஸ்திரேலிய பவுலிங்கை எதிர்கொண்டு இருக்கிறார்.

வலி
தனக்கு இருந்த வலியை முகத்தில் காட்டிக்கொள்ளாமல் இவர் ஆடி இருக்கிறார். இப்படி காயத்தோடு இவர் ஆடியதால் இவரின் காயம் மேலும் பெரிதாகி உள்ளது. இதனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் இருந்து விஹாரி நீக்கப்பட்டு உள்ளார்.

நீக்கம்
இவருக்கு பதிலாக இந்திய அணியில் இன்னொரு வீரர் ஆட வேண்டும். இவருக்கு பதிலாக அணிக்குள் மயங்க் அகர்வாலை கொண்டு வர திட்டமிடப்பட்டது. முழு நேர பேட்ஸ்மேன் ஒருவர் அணிக்குள் வந்தால் நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

கணிப்பு
ஆனால் மயங்க் அகர்வால் காயமாக உள்ளார். இவர் இன்று அல்லது நாளை மாலைக்குள் பிட்னஸை நிரூபிக்க வேண்டும். முதலில் எடுக்கப்பட்ட டெஸ்டில் இவருக்கு காலில் லேசான பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்காவது டெஸ்டில் ஆட போகும் இந்திய அணியின் விவரம் நாளை வெளியிடப்படும்.

நாளை
இதனால் நாளை மயங்க் அகர்வாலுக்கு மீண்டும் சோதனை செய்யப்பட உள்ளது. இதற்குள் மயங்க் அகர்வால் பிட்னஸை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாளைக்குள் மயங்க் அகர்வால் முழு பிட்னஸை நிரூபிக்கவில்லை என்றால் இவருக்கு பதிலாக சாகா அல்லது பிரித்வி ஷா ஆடுவார்கள் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications