Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஆட்டத்தில் இரண்டு ஹாட்ரிக் வாய்ப்புகள் பறிபோயின!

பெங்களுர்: பெங்களூரில் நடக்கும் பெங்களூர், மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இரண்டு பேருக்கு ஹாட்ரிக் வாய்ப்புகள் கிடைத்தது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11-வது சீசன் நடந்து வருகிறது. பெங்களூரில் நடந்த 31வது ஆட்டத்தில் மும்பையும், பெங்களுர் அணியும் மோதின.

Two hat-trick chances missed in IPL

முதலில் ஆடிய பெங்களூர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆட்டத்தின் 17வது ஓவரை மும்பையின் ஹார்திக் பாண்டயா வீசினார். முதல் பாலில் மந்தீப் சிங்கை வீழ்த்தினார். அதற்கடுத்த பந்தில் விராட் கோஹ்லியை வீழ்த்தினார். ஹாட்ரிக் விக்கெட் எடுப்பதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், வாஷிங்டன் சுந்தர் ஒரு ரன் எடுத்தார்.

அதேபோல் மும்பை பேட்டிங் செய்தபோது, மூன்றாவது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். முதல் பந்தில் சூரியகுமார் யாதவை வீழ்த்தினார். இரண்டாவது பந்தில் ரோஹித் சர்மாவை வீழ்த்தினார். அப்போது களமிறங்கிய போலர்டு, உமேஷ் யாதவின் ஹாட்ரிக் கனவை தகர்த்தார்.

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 17 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, May 1, 2018, 22:40 [IST]
Other articles published on May 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+