For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா, ஆஸ்திரேலியா சாதனை... எந்த அணி முறியடிக்கும்... பொறுத்திருந்து தான் பார்க்கணும்!

அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் துவங்கியுள்ளது.

டாஸ் வென்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் விராட் கோலி டாஸ் வென்ற டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இதேபோல தான் விளையாடியுள்ள 7 பகலிரவு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இதில் எந்த அணி தனது சாதனையை தொடரும் என்பது இந்த போட்டியின் இறுதியில் தான் தெரியவரும்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. வெளிநாட்டில் இந்தியா விளையாடும் முதல் பகலிரவு போட்டி இது.

ஆஸி தொடர் வெற்றி

ஆஸி தொடர் வெற்றி

இந்நிலையில் இதுவரை தான் விளையாடியுள்ள 7 பகலிரவு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து வெற்றி அடைந்துள்ளது. இதேபோல விராட் கோலி தலைமையிலான டெஸ்ட் போட்டிகளில் அவர் டாஸ் வென்றுள்ள போட்டிகள் எதிலும் இந்தியா இதுவரை தோல்வியடைந்ததில்லை.

தோல்வி அடைந்ததில்லை

தோல்வி அடைந்ததில்லை

இதுவரை விராட் கோலி 25 டெஸ்ட் போட்டிகளில் டாஸ் வென்றுள்ள நிலையில் அதில் 21 போட்டிகளில் வெற்றியும் 4 போட்டிகளில் டிராவும் இந்திய அணி அடைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

சாதனை பயணம்

சாதனை பயணம்

இதையடுத்து இந்த இரு அணிகளுக்கும் இந்த போட்டியில் வெற்றியடையும் வாய்ப்பு காணப்படுகிறது. ஆனால் எந்த அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய சாதனையை தொடரும் என்பதை காண இன்னும் ஐந்து நாட்கள் ரசிகர்கள் காத்திருக்க வேண்டும்.

Story first published: Thursday, December 17, 2020, 19:38 [IST]
Other articles published on Dec 17, 2020
English summary
Australia never lost a D/N test -Virat Kolhi never lost a test match after winning the toss
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+