Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஊர் சுற்றியதற்கு கிடைத்த பரிசு? 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா - இங்கிலாந்து தொடர் போச்சா?

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

England-ல் இருக்கும் 2 Indian Team வீரர்களுக்கு Corona பாதிப்பு.. அதிர்ச்சியில் BCCI

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் அங்கேயே தங்கியுள்ளனர்.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கவுள்ளது.

ஊர் சுற்றிய வீரர்கள்

ஊர் சுற்றிய வீரர்கள்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்த பிறகு, இங்கிலாந்து தொடருக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் மீதம் இருந்ததால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களுக்கு 10 நாட்கள் பிரேக் கொடுக்கப்பட்டது. அதாவது, இந்த 10 நாட்களுக்கு வீரர்கள் பயோ-பபுளில் இருந்து வெளியே சென்றனர். இங்கிலாந்தில் பல இடங்களை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே, குடும்பம் குடும்பமாக இங்கிலாந்து வந்திருந்த இந்திய வீரர்களுக்கு இது பொன்னான வாய்ப்பாக அமைந்தது.

உடல்நலம் எப்படி இருக்கு?

உடல்நலம் எப்படி இருக்கு?

இதனால், இந்த 10 நாட்களை குடும்பத்துடன் இங்கிலாந்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "இங்கிலாந்தில் 2 வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், நல்லவேளையாக இருவருமே இப்போது நலமுடன் உள்ளனர். அதில் ஒருவருக்கு இப்போது நெகட்டிவ் ரிசல்ட் வந்துவிட்டது. மற்றொருவருக்கு மீண்டும் ஜுலை 18ம் தேதி கொரோனா சோதனை நடத்தப்பட உள்ளதாகவும், அன்றோடு அவருக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தலும் முடிவடைவதாக" குறிப்பிட்டுள்ளது.

அறிகுறிகள் இல்லை

அறிகுறிகள் இல்லை

இரு வீரர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்படவில்லை. அதில் ஒருவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துவிட்டது. மற்றொருவருக்கு கடந்த ஞாயிறன்று நடத்தப்பட்ட சோதனையில் பாசிட்டிவ் வந்ததால், அவர் மட்டும் தொடர்ந்து தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கும் அறிகுறிகள் ஏதும் இல்லை என்றும், நெகட்டிவ் ரிசல்ட் வந்த உடன், அந்த வீரர் மீண்டும் அணியுடன் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சலசலப்பு

சலசலப்பு

வீரர்களின் இந்த கொரோனா விவகாரம் தற்போது தான் வெளியே வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், 10 நாட்களுக்கு கொடுக்கப்பட்ட விடுமுறை என்று கூறப்படுகிறது. அப்போது, பல வீரர்கள் விம்பிள்டன் டென்னிஸ் தொடருக்கும், யூரோ கால்பந்து போட்டிகளையும் நேரில் பார்க்கச் சென்ற நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Thursday, July 15, 2021, 16:31 [IST]
Other articles published on Jul 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+