கோஹ்லி- அனுஷ்கா திருமணம்.. இந்த இரண்டு வீரர்களுக்குத்தான் அழைப்பு போய் இருக்காம்!
டெல்லி: இந்த மாதத்தில் கோஹ்லி, அனுஷ்கா சர்மா இடையே திருமணம் நடக்க போவதாக தகவல்கள் வெளியானது. இந்த திருமணம் எங்கு நடக்கும், யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது அதுகுறித்து அனைத்து விவரங்களும் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இந்த செய்தியை கோஹ்லியின் செய்தி தொடர்பாளர் மறுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் நாளுக்கு நாள் கோஹ்லி - அனுஷ்கா திருமணம் குறித்த புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

கோஹ்லி - அனுஷ்கா
இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் இருந்து கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. கோஹ்லியின் இந்த விடுமுறை அவரது கல்யாணத்திற்காகத்தான் என்று கூறப்பட்டது. கோஹ்லியும், அனுஷ்காவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் நிலையில் தற்போது கல்யாணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியானது. இந்த மாத இறுதிக்குள் கல்யாணம் நடக்க இருப்பதாகும், 14, 15 தேதிகளில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

எங்கு நடக்கிறது
இந்த நிலையில் இந்த திருமணம் இத்தாலியில் நடப்பதாக முதலில் தகவல் வெளியானது. அதேபோல் அனுஷ்கா சர்மா இத்தாலிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். மேலும் கோஹ்லியின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் இத்தாலிக்கு சென்று இருக்கின்றனர். கோஹ்லி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தற்போது தீவிரமாக திருமண வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

யாருக்கு அழைப்பு
இந்த திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் யாரும் அழைக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. தற்போது இந்திய அணி இலங்கை தொடரில் இருப்பதால் இந்திய வீரர்கள் யாரும் திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை. மிகவும் ரகசியமாக நண்பர்களும், உறவினர்களும் மட்டும் திருமணத்திற்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

யுவராஜுக்கு அழைப்பு
தற்போது இந்த திருமணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதற்கு தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் அழைக்கப்பட்டு இருக்கிறார். சச்சின் கோஹ்லியின் முன்மாதிரி என்பதால் அவர் அழைக்கப்பட்டு உள்ளார். அதேபோல் திருமணத்திற்கு யுவராஜ் சிங்கும் அழைக்கப்பட்டுள்ளார். யுவராஜ் அழைக்கப்பட்டதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications