Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது ரிடையர்மெண்ட்டா... செல்லாது... செல்லாது... இன்னும் 2 உலக கோப்பையை பாக்கணும்!

சாகுவாரமாஸ் : தற்போதைக்கு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று மேற்கிந்திய தீவுகளின் வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

இன்னும் 5 ஆண்டுகளுக்கு அதாவது தனது 45 வயது வரை தான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனது ஓய்விற்கு முன்னதாக இன்னும் 2 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்று விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் வீரர்

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் தன்னுடைய அணிக்காக மட்டுமின்றி ஐபிஎல், ஐஎஸ்எல் உள்ளிட்ட பல்வேறு தொடர்களின் நட்சத்திர நாயகனாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஐபிஎல் 2020 தொடரின் போட்டிகளிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கென விளையாடி அனைவரின் புருவங்களையும் உயர செய்தார்.

டி20 போட்டிகளில் சிறப்பு

டி20 போட்டிகளில் சிறப்பு

கிறிஸ் கெயிலுக்கு 41 வயதாகியுள்ள நிலையிலும் அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். தன்னை யூனிவர்சல் பாஸ் என்று கூறிக்கொள்ளும் அவர், டி20 போட்டிகளில் சிறப்பான அதிரடிகளை அளித்து வருவதால், அனைத்து நாடுகளின் டி20 லீக் தொடர்களில் அவர் தொடர்ந்து இணைக்கப்பட்டு வருகிறார்.

5 ஆண்டுகள் விளையாடுவேன்

5 ஆண்டுகள் விளையாடுவேன்

கிறஸ் கெயிலுக்கு 41 வயதாகியுள்ள நிலையில் அவரது ஓய்வு குறித்து பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். ஆனால் தற்போதைக்கு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று கெயில் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு தனக்கு 45 வயது ஆகும் வரையிலும் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

வயது எண்ணிக்கை மட்டுமே

வயது எண்ணிக்கை மட்டுமே

இன்னும் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ள கெயில், 2 உலக கோப்பை தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வயது என்பது எண்ணிக்கை மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Friday, January 1, 2021, 23:50 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+