Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்களை எல்லாம் நம்பி அணியில் எடுத்ததற்கு.. ஏமாற்றிய 2 இளம் வீரர்கள்.. கோபத்தில் கோலி.. பின்னணி!

சிட்னி: இந்திய அணியில் வாய்ப்பு பெற்று இருக்கும் 2 இளம் வீரர்கள் தொடர்ந்து மோசமாக ஆடி சொதப்பி வருகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்த வாரம் தொடங்க உள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி 20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

ஒருநாள் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது. இரண்டு அணிகளும் தற்போது டெஸ்ட் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.

முக்கியம்

முக்கியம்

இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக இது பார்க்கப்படுகிறது. இதற்காக இரண்டு பயிற்சி ஆட்டங்களும் நடத்தப்பட்டது. இரண்டு பயிற்சி ஆட்டங்களும் கடைசியில் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று இருக்கும் 2 இளம் வீரர்கள் தொடர்ந்து மோசமாக ஆடி சொதப்பி உள்ளனர்.

எப்படி

எப்படி

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று கருதப்படும் இரண்டு இளம் வீரர்களில் ஒருவர் சுப்மான் கில், இன்னொருவர் பிரித்வி ஷா. இவர்கள் இருவரும் பயிற்சி ஆட்டத்தில் சுமாராகவே ஆடி உள்ளனர். இரண்டு பேருமே இந்திய அணி எதிர்கால ஓப்பனர்களாக நம்பி இருக்கும் வீரர்கள். ஆனால் இரண்டு பேருமே தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார்கள்.

 ஏமாற்றம்

ஏமாற்றம்

முக்கியமாக பிரித்வி ஷா மிக மோசமான பார்மில் இருக்கிறார். கடந்த வருடம் நடந்த முதல் தர போட்டிகளில் இவர் சரியாக ஆடவில்லை. அதன்பின் ஐபிஎல் போட்டியிலும் இவர் சரியாக ஆடவில்லை. பின் இந்திய அணி ஆடிய பயிற்சி ஆட்டங்களிலும் இவர் சரியாக ஆடவில்லை.

வாய்ப்பு

வாய்ப்பு

இன்னொரு பக்கம் சுப்மான் கில் ஐபிஎல் போட்டியில் சுமாராக ஆடினார். அதன்பின் பயிற்சி ஆட்டங்களில் பெரிய அளவில் அதிரடி காட்டவில்லை என்றாலும் சுமாராக ஆடினார். ஆனால் பிளேயிங் லெவனில் ஆடும் அளவிற்கு இவர் ஒன்றும் சிறப்பாக அதிரடி காட்டவில்லை.

மோசம்

மோசம்

இவர்கள் இருவரையும் அணியில் வளரவிட்டு ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்களை கழட்டி விடலாம் என்று கோலி நினைத்தார். ஆனால் வரிசையாக வாய்ப்பு பெற்ற இரண்டு பேருமே மோசமாக சொதப்பி ஏமாற்றம் அளித்துள்ளனர். இதனால் இந்திய அணியில் மூத்த வீரர்கள் கே. எல் ராகுல்,மயங்க் அகர்வால் ஆகியோருக்கு டாப் ஆர்டரில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறுகிறார்கள்.

Story first published: Tuesday, December 15, 2020, 13:25 [IST]
Other articles published on Dec 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+