Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U-19 Asia cup - இந்தியாவிடம் வாலை ஆட்டிய பாக். வீரர்.. விக்கெட் எடுத்து தாங்க முடியாத சேட்டை

துபாய் : 19 வயது உட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் பல பரிட்சை நடத்தி வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களம் இறங்கிய இந்திய அணியில் ஆர்சின் குல்கர்னி 24 ரன்களில் ஆட்டம் இழக்க ருத்ரா பட்டேல் ஒரு ரன்னில் வெளியேறினார். இதனை அடுத்து கேப்டன் மற்றும் ஆதார்ஸ் சிங் பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

U-19 Asia cup Ind vs Pak - Pakistan fast bowler Mohammad zeeshan wild celebration


ஆதர்ஷ் சிங் 81 பந்துகளை எதிர் கொண்டு 62 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து முசீர் கான் இரண்டு ரன்களிலும் அவிநாஸ் 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க கேப்டன் உதய் சரன் மட்டும் பொறுமையாக விளையாடி அரை சதம் கடந்தார். இறுதியில் சச்சின் தன்ஸ் என்ற வீரர் 42 பந்தில் 58 ரன்கள் சேர்க்க அண்டர் 19 இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் சேர்த்தது.

இந்த நிலையில் ஆட்டத்தின் 12 வது ஓவரில் இந்திய வீரர் ருத்ராவின் விக்கெட்டை பாகிஸ்தான் வேக பந்துவீச்சாளர் முகமது சீஸான் கைப்பற்றினார். ருத்ரா பந்தை அடித்து ஆட முற்பட்டபோது பந்து விக்கெட் கீப்பர் இடம் எட்ஜாகி பிடிபட்டது. ஆனால் இந்த விக்கெட்டை பாகிஸ்தான் வீரர் முஹம்மது சீஸான் எல்லை மீறிய அளவில் கொண்டாடினார்.


முதலில் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கொண்டாடியவர் பிறகு தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி கையை ஓங்கி காற்றில் ஒரு குத்து விட்டார். எனினும் இதனை கொஞ்சம் கூட பெரிது படுத்தாமல் இந்திய வீரர் ருத்ரா பெவிலியன் நோக்கி சென்றார். முகமது சீஸான் எதற்காக இவ்வாறு எல்லை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் என்று அங்கு இருந்த யாருக்குமே புரியவில்லை. பேட்ஸ்மேன் இடம் அத்துமீறி நடந்து கொண்ட முகமது சீசனுக்கு ஐசிசி அபாரதம் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

இதுவரை இந்தியாவும் பாகிஸ்தானும் 19 வயது உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 25 முறை மோதி இருக்கிறார்கள். இதில் இந்தியா 19 முறையும், பாகிஸ்தான் 9 முறையும் ஒரு போட்டி டையாகவும் முடிந்திருக்கிறது. கடைசியாக நடைபெற்ற ஐந்து போட்டிகளில் இந்திய அண்டர் 19 அணி 4 போட்டிகளிலும் பாகிஸ்தான் அண்டர் 19 அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Sunday, December 10, 2023, 15:03 [IST]
Other articles published on Dec 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+