Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் U-19 உலககோப்பை டி20 கிரிக்கெட்.. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.. புதிய சாதனை

டர்பன் : மகளிர் U-19 உலககோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

மகளிர் கிரிக்கெட்டை பொறுத்தவரை தற்போது முதல் முறையாக அண்டர் 19 உலககோப்பை கிரிக்கெட் போட்டியை ஐசிசி நடத்தியது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்கியது.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

இதில் இந்திய அணி , ஆஸ்திரேலியாவுடன் மட்டும் தோல்வியை தழுவியது. மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகளின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

68 ரன்கள்

68 ரன்கள்

இங்கிலாந்து வீராங்கனை கிரேஸ் 4 ரன்களிலும், லிபர்டி டக் அவுட்டாகியும், ஹாலாந்து 10 ரன்களிலும், செரின் 3 ரன்களிலும்சாரிஸ் 2 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ரியானா 19 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து மகளிர் அணி 68 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அர்ச்சணா தேவி

அர்ச்சணா தேவி

இந்திய பந்துவீச்சில் அர்ச்சணா, சிந்து, பர்ஷவி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து, இங்கிலாந்து மகளிர் அணி தங்களது ஆட்டத்தை தொடங்கியது. கேப்டன் செஃபாலி வர்மா 15 ரன்களிலும், ஸ்வேதா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இந்தியா சாம்பியன்

இந்தியா சாம்பியன்

சௌமியா திவாரி, திரிஷா ஆகியோர் தலா 24 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய மகளிர் அணி 69 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 36 பந்துகள் எஞ்சிய நிலையில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி உலக கோப்பையை வென்றது. அண்டர் 19 உலககோப்பையை இந்திய ஆடவர் அணியும், இந்திய மகளிர் அணியும் வென்று அசத்தி இருக்கிறது.

Story first published: Sunday, January 29, 2023, 20:23 [IST]
Other articles published on Jan 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+