
தடுமாறிய U-19 இந்தியா
டாஸ் வென்ற U-19 தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. U-19 இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அங்கிரிஷ் மற்றும் ஹர்னூர் சிங் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, U-19 இந்திய அணி 11 ரன்களில் 2 விக்கெட்டை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த கேப்டன் யாஷ் துல், ஷாயிக் ரஷிதுடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டார்

யாஷ் துல் அதிரடி
தென்னாப்பிரிக்க வீரர்கள் நெருக்கடியாக பந்துவீசினாலும், அதனை லாவகமாக கேப்டன் யாஷ் துல் எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். கேப்டன் யாஷ் தூல் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார். ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், யாஷ் தூல் அதிரடியாக விளையாடி 82 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் U-19 இந்திய அணி 232 ரன்களை எடுத்தது.

அருமையான கேப்டன்ஷி
233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் U-19 தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. அப்போது யாஷ் துல கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். ஃபில்டிங் நிற்க வைப்பதில் இருந்து, பந்துவீச்சாளர்களுக்கு ஓவர்கள் வழங்கியது வரை யாஷ் துல் செயல்பாடு அனைவரையும் ஈர்த்தது. குறிப்பாக பந்துவீச்சாளர்களை அவர் சுழற்சி முறையில் கையாண்டதால் எதிரணி வீரர்கள் கடுமையாக குழம்பினர்

இந்தியா வெற்றி
இதனால் தென்னாப்பிரிக்க அணியில் பிரவிஸ் மட்டுமே 65 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் U-19 தென்னாப்பிரிக்க அணி 187 ரன்களில் ஆட்டமிழந்தது. சுழற்பந்துவீச்சாளர் விக்கி ஆஸ்ட்வால் 10 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விராட் கோலி கேப்டனாக விலகிய அதே நாளில் மற்றொரு டெல்லி வீரர் அவரை போலவே ஜொலித்தார்.


Click it and Unblock the Notifications











