
ராக்கெட் வேகம்
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 40 ரன்கள் சேர்த்தது. ஹர்னூர் சிங் 15 ரன்களில் ஆட்டமிழக்க,கேப்டன் நிஷாந்த் 15 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஆங்கிரிஷ், ராஜ் பவா ஜோடி, உகாண்டா பந்துவீச்சை உப்புக்கண்டம் போட்டனர். இவர்களது அதிரடியால் ஸ்கோர் ராக்கெட் வேகத்துக்கு உயர்ந்தது.

அதிவேக சதம்
குறிப்பாக 23வது ஓவரில் இந்த ஜோடி 2 பவுண்டரி, 2 சிக்சர் என 20 ரன்களை குவித்தது.அங்கிரிஷ் 92 பந்துகளில் சதம் விளாச, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ராஜ் பவா, 69 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் U-19 உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்

405 ரன்கள்
அங்கிரிஷ் 30வது ஓவரில் ஒரு 6, 2 பவுண்டரிகள் விளாச, இந்த ஜோடி உகாண்டா பந்துவீச்சாளர்களை ஏன்டா பந்துவீச்சை தேர்வு செய்தோம் என்று நினைக்க வைத்தது. 40வது ஓவரில் இந்திய அணி 300 ரன்களை கடந்தது.அங்கிரிஷ் 144 ரன்களில் ஆட்டமிழக்க, ராஜ் பவா 101 பந்துகளில் 150 ரன்கள் விளாசினார். இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் சேர்த்தது. ராஜ் பவா 108 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்தார். இதில் 8 சிக்சர்களும், 14 பவுண்டரிகளும் அடங்கும். இது U19 உலகக் கோப்பையில் இந்திய வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகும்

79 ரன்களில் சுருண்டது
406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணி பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். கேப்டன் நிஷாந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, அந்த அணி 19.4வது ஓவரில் 79 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.


Click it and Unblock the Notifications











