Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U19 Asia Cup: வரலாற்று சாதனை படைத்த இந்திய அண்டர் 19 கேப்டன்.. உன்முக்த் சந்த் சாதனை முறியடிப்பு

ஹார்ஜா: 2024 அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் முகமது அமான் 12 ஆண்டு சாதனை ஒன்றை முறியடித்து இருக்கிறார். ஜப்பான் அணிக்கு எதிராக இந்திய அணி ஆடிய ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் அவர் அபாரமாக ஆடி சதம் அடித்து இருந்தார்.

இதன் மூலம் அண்டர் 19 ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை முகமது அமான் செய்தார். 2024 அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்து இருந்தது.

u19 asia cup 2024 unmukt chand 19 2024

இந்த நிலையில் இரண்டாவது போட்டியில் ஜப்பானை சந்தித்தது. அந்த அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக ரன் சேர்த்தது. துவக்க வீரர் ஆயுஷ் மாத்ரே 29 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். கே பி கார்த்திகேயா 49 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார்.

கேப்டன் முகமது அமான் நான்காம் வரிசையில் இறங்கி 118 பந்துகளில் 122 ரன்கள் சேர்த்தார். கடைசி சில ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடிய ஹர்திக் ராஜ் ஆட்டம் இழக்காமல் 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து இருந்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்தப் போட்டியில் 122 ரன்கள் அடித்ததன் மூலம் அண்டர் 19 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையை செய்தார் முகமது அமான். இதற்கு முன் 2012 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அண்டர் 19 அணியின் கேப்டனாக செயல்பட்ட உன்முக்த் சந்த் அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக 121 ரன்கள் எடுத்து இருந்தார். அதே தொடரில் இலங்கை அணிக்கு எதிராக 116 ரன்கள் எடுத்து இருந்தார்.

அந்த இரண்டுமே அண்டர் 19 இந்திய கேப்டனின் அதிகபட்ச ரன்களாக இருந்தது. அந்த சாதனையை தற்போது முகமது அமான் முறியடித்து இருக்கிறார். இந்த போட்டியில் ஜப்பான் அணி பேட்டிங்கில் திணறி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, December 3, 2024, 7:55 [IST]
Other articles published on Dec 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+