For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா - இலங்கை அண்டர் 19 ஆசிய கோப்பை அரையிறுதி.. எங்கு பார்ப்பது? லைவ் ஸ்ட்ரீமிங் விவரம்

துபாய்: 2025 அண்டர் 19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன. குரூப் சுற்றில் எதிரணிகளை துவம்சம் செய்து, தோல்வியே சந்திக்காமல் கெத்து காட்டும் இந்திய அண்டர் 19 அணி, இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.

இன்று நடக்கும் மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. ஒருவேளை இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றால், மீண்டும் ஒரு இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டியை ரசிகர்கள் கண்டு களிக்கலாம். ஆனால் அதற்கு முன், இந்தியா இன்று இலங்கையை வீழ்த்தியாக வேண்டும்.

U19 Asia Cup 2025 India vs Sri Lanka Semifinal Live Streaming and Match Details

அசுர பலத்துடன் இந்தியா

நடப்பு தொடரில் இந்திய அணியின் ஃபார்மை பார்த்து மற்ற அணிகள் மிரண்டு போயுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும். முதல் போட்டியில் யுஏஇ அணியை 234 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்து பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மலேசியாவை 315 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது.

இப்படி ஹாட்ரிக் வெற்றிகளுடன் வரும் ஆயுஷ் மத்ரே தலைமையிலான இந்திய படை, இன்று இலங்கையையும் வெளுத்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் இலங்கை அணி 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று, ஒரு தோல்வியுடன் அரையிறுதிக்கு வந்துள்ளது.

அரையிறுதிப் போட்டி விவரங்கள் மற்றும் பார்ப்பது எப்படி?

இந்தியா U19 மற்றும் இலங்கை U19 அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியை எப்போது, எங்கு பார்க்கலாம்?

போட்டி: இந்தியா U19 vs இலங்கை U19 (அரையிறுதி)

தேதி: டிசம்பர் 19, 2025 (இன்று - வெள்ளிக்கிழமை)

நேரம்: இந்திய நேரப்படி காலை 10:30 மணிக்கு

இடம்: ஐசிசி அகாடமி மைதானம், துபாய்.

லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்ப்பது எப்படி?

இந்தியா vs இலங்கை அண்டர் 19 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியை தொலைக்காட்சியில் பார்க்க விரும்புபவர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் (Sony Sports) குழும சேனல்களில் காணலாம். மொபைலில், ஆன்லைனில் பார்க்க விரும்புபவர்கள் சோனி லிவ் (SonyLIV) செயலியில் அல்லது இணையதளத்தில் நேரலையாகக் காணலாம்.

வீரர்கள் விவரம் (Squads):

இந்தியா U19 அணி:

வைபவ் சூர்யவன்சி, ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா, கனிஷ்க் சௌஹான், அபிகியான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் பங்காலியா, கிலன் படேல், ஹெனில் படேல், தீபேஷ் தேவேந்திரன், உத்தவ் மோகன், நமன் புஷ்பக், வேதாந்த் திரிவேதி, கிஷன் குமார் சிங், ஆரோன் ஜார்ஜ், யுவராஜ் கோஹில்.

இலங்கை U19 அணி:

திமந்தா மஹாவிதனா, வீரன் சமுதித, கித்மா விதானபத்திரன, கவிஜ கமகே, விமத் தின்சர (கேப்டன்), சமிக ஹீனதிகல, துல்னித் சிகேரா, ஆதம் ஹில்மி (விக்கெட் கீப்பர்), செத்மிக செனவிரத்ன, ரசித் நிம்சரா, தருஷ நவோத்யா, மதுலன் குகதாஸ், விக்னேஸ்வரன் ஆகாஷ், தருஷ நெத்சரா, சனுஜ நிந்துவார.

இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று, கோப்பையை நோக்கி இந்தியா முன்னேறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Story first published: Friday, December 19, 2025, 7:08 [IST]
Other articles published on Dec 19, 2025
English summary
U19 Asia Cup 2025: India vs Sri Lanka Semifinal Live Streaming and Match Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+