Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U19 ஆசிய போட்டி.. ராகுல் டிராவிட், சேவாக் மகனுக்கு இந்திய அணியில் இடம்.. முழு விவரம்

மும்பை: ஏசிசி ஆண்கள் 19 வயதிற்குட்பட்டோருக்கான U19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஓமானின் மஸ்கட் நகரில் நவம்பர் 5 முதல் 14 வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் பங்கேற்க உள்ள இந்த அணியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான ராகுல் டிராவிட்டின் மகன் அன்வய் டிராவிட் மற்றும் வீரேந்தர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் ஆகிய இருவருக்கும் இடம் கிடைத்துள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த அன்வய் டிராவிட் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஆர்யவீர் சேவாக் ஆகிய இருவரும் சமீபத்தில் நிறைவடைந்த வினு மான்கட் கோப்பை தொடரில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

Anvay Dravid

17 வயதான விக்கெட் கீப்பர் பேட்டர் அன்வய் டிராவிட், வினு மான்கட் கோப்பையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 100 பந்துகளில் 151 ரன்கள் குவித்து, கர்நாடக அணி இமாலய இலக்கை சேஸ் செய்ய உதவினார். மேலும், கடந்த ஜூலை மாதம் ஹம்பாந்தோட்டையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற இளையோர் ஒருநாள் போட்டியில் 67 பந்துகளில் 87 ரன்கள் விளாசி தனது திறமையை நிரூபித்தார்.

அதேபோல, 19 வயதான ஆர்யவீர் சேவாக்கும் வினு மான்கட் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். விஜயநகரத்தில் சண்டிகர் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் அவர் 143 பந்துகளில் 173 ரன்கள் குவித்தார்.

இந்தத் தொடரில் இந்திய அணிக்கு லக்ஷ்யா ராய்ச்சந்தானி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியாவுடன் ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. 'பி' பிரிவில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இரு பிரிவுகளிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

மஸ்கட்டில் நடைபெறும் இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் நவம்பர் 6-ஆம் தேதி நேபாளத்தை எதிர்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 8-ஆம் தேதி பாகிஸ்தான் அணியையும், நவம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.

இந்திய U19 அணி விவரம்: லக்ஷ்யா ராய்ச்சந்தானி (கேப்டன்), ஆர்யவீர் சேவாக், வி.கே. வினீத், யாஷ்பர்தன் சிங் சவுகான் (துணை கேப்டன்), குஷாக்ரா ஓஜா, அர்ஜுன் ராஜ்புத், மனல் சவுகான், அன்வய் டிராவிட் (விக்கெட் கீப்பர்), ரஜத் பாகேல் (விக்கெட் கீப்பர்), வி. யாஷ்வீர், ஆர்யன் சவ்சானி, மோஹித் உல்வா, காவ்யா படேல், ஷாவின் வினோத், இஷான் சூட்.

Story first published: Friday, October 30, 2026, 15:45 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+